புலம் பெயர் தொழிலாளர்கள் நிரம்பி வழிந்த ராம்லீலா மைதானம்.! குஜராத் தமிழ்நாட்டில் நடந்த தடியடி.!!

By T BalamurukanFirst Published May 18, 2020, 10:11 PM IST
Highlights

புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல மத்திய அரசு ரயில் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்துள்ளது.இதற்காக முன்பதிவு டிக்கெட் பெறுவதற்காக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் குவிந்தனர். அந்த மைதானம் முழுவதும் புழுதிகிளம்பியது. 

புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல மத்திய அரசு ரயில் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்துள்ளது.இதற்காக முன்பதிவு டிக்கெட் பெறுவதற்காக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் குவிந்தனர். அந்த மைதானம் முழுவதும் புழுதிகிளம்பியது. அந்த அளவிற்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிப் போனார்கள்.
குஜராத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்புங்க கூடுதலாக ரயில் வசதி செய்து கொடுங்கள் என்று போராடியதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை ஓட விட்ட சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போன்று சேலத்திலும் நடைபெற்றது.


புலம் பெயர் தொழிலாளர்கள் கூறும் போது.. நாங்கள் வேலையில்லாமல் வருமானம் இன்றி இருக்கிறோம். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும் எங்களிடம் வீட்டு ஓனர் வாடகை கேட்கிறார்கள். நாங்கள் எப்படி வாடகை கொடுக்க முடியும். நாங்கள் குடும்பத்தோடு சாப்பாட்டுக்காக கஷ்டப்படுகிறோம். எங்களை சொந்த ஊருக்கு அனுப்புங்கள் அங்கே எங்கள் அப்பா அம்மா உறவுகள் இருக்கிறார்கள். அங்கே போனால் நாங்கள் சந்தோசமாக இருப்போம். அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யவில்லை. உணவு அளிக்கவும் இல்லை. தயவு செய்து எங்களை சொந்த ஊரில் கொண்டு போய் விடுங்கள். கூடுதலாக ரயில் வசதி செய்து கொடுத்தால் இந்த அளவிற்கு கூட்டம் கூடாது. பத்துநாட்களுக்கு முன்பு பதிவு செய்தோம்.இப்பதான் ரயில் பயணத்திற்கான டோக்கன் கிடைத்திருக்கிறது என்கிறார்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்.

click me!