சாராய ஃபேக்டரியை நடத்துவாங்க.. டாஸ்மாக்கையும் மூடச்சொல்லுவாங்க.. இதுதான் திராவிட அரசியல்.. ஹெச்.ராஜா அதிரடி!

By Asianet TamilFirst Published May 18, 2020, 9:20 PM IST
Highlights

இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே...
கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும்...
லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு... ஊழலை நடமாட விடமாட்டோம் என்பதுதான் திராவிட அரசியல்!” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதுதான் திராவிட அரசியல் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.
திராவிட அரசியல் என்றால் என்னவென்று அவ்வப்போது தன்னுடைய ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் விமர்சிப்பது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் வழக்கம். இந்நிலையில் ‘திராவிட அரசியல்...’ என்ற தலைப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
அந்தப் பதிவில், “சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும்,
இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்திய எதிர்ப்பதும்,
கர்நாடகாவிடமிருந்து தண்ணீர் தரவில்லையென்றால் தமிழ்நாடு தனி நாடு ஆகுமெனச் சொல்லிக்கொண்டே...
ஜோலார்பேட்டை தண்ணீர் சென்னைக்கு தரவிடமாட்டோமென்கிறதும்,


தன்னுடைய பிள்ளைகளை பல லட்சங்களை கட்டி பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டே...
அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும்...
இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே...
கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும்...
லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு... ஊழலை நடமாட விடமாட்டோம் என்பதுதான் திராவிட அரசியல்!” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பொத்தாம் பொதுவாக திராவிட அரசியல் என்று ஹெச்.ராஜா விமர்சித்திருந்தாலும், திமுகவை மனதில் வைத்தே இந்தப் பதிவை அவர் வெளியிட்டுள்ளார் என்பது தெரிகிறது. இதே பதிவை இந்தியிலும் வெளியிட்டுள்ளார் ஹெச்.ராஜா.

click me!