சந்திரபாபு நாயுடு கட்சிக்கு மரண அறிவிப்பு வெளியிட்ட இயக்குநர் ராம்கோபால் வர்மா...

By Thiraviaraj RMFirst Published May 23, 2019, 12:38 PM IST
Highlights

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில் அக்கட்சியால் அநியாயத்துக்குப் பாதிக்கப்பட்ட இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மரண அறிவிப்பு’ செய்தி வெளியிட்டு தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 
நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து ஆந்திர சட்டசபைக்கும் நடந்து முடிந்ததில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் பார்ட்டி படுதோல்வி அடைந்துள்ளது. தேர்தல் நடந்த 175 தொகுதிகலில் 12 மணி நிலவரப்படி ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ்.ஆர் காங்கிரஸ் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு எதிராக ட்விட் பண்ணிய இயக்குநர் ராம்கோபால் வர்மா,,,பெயர் தெலுகு தேசம் கட்சி தோற்றம் 29 மார்ச் 1982.மறைவு...23 மே 2019. இறப்புக்கான காரணங்கள் பொய்கள், முதுகில் குத்துதல்,ஊழல், தகுதியின்மை,ஒய்.எஸ்.ஜெகன் மற்றும் நரலோகேஷ்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ராம்கோபால் வர்மா கடைசியாக இயக்கிய ‘லட்சுமி என்.டி.ஆர்’ படத்தை ஆந்திராவில் ரிலீஸ் பண்ணவிடாமல் சந்திரபாபு நாயுடு கொடுத்த தொந்தரவுக்கு பதிலடியாக அமைந்துள்ளது இந்த ட்விட்.

click me!