டேய்... மாவட்டம்..! செல்போனை புடுங்குடா... ஒருமையில் அநாகரீகமாக பேசிய டாக்டர் ராமதாஸ்..!

By Thiraviaraj RMFirst Published Nov 27, 2021, 12:43 PM IST
Highlights

டேய் மாவட்டம்... புடுங்குடா. செல்போனை புடுங்குடா. நான் பேசவா. இல்ல போகவா. நீ பேசினா நான் எப்படி பேசுவது.? 

கடலூரில் பாமக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ராமதாஸ், ‘’வெறும் 23 லட்சம் வாக்குகளை நாம் பெற்றோம் என்று சொன்னால், எவன் வாயைத் திறக்கிறானோ அவனை அடக்கு... அந்த செல்போனை எல்லாம் புடுங்கு. போலீசு நான் சொல்றேன் செல்போனை புடுங்கு. ஒரு செல்போனைக் கூட உங்களால புடுங்க முடியாதா?

டேய் மாவட்டம்... புடுங்குடா. செல்போனை புடுங்குடா. நான் பேசவா. இல்ல போகவா. நீ பேசினா நான் எப்படி பேசுவது.? அமைதியா இருங்க. 2016 ல 23 லட்சம் வாக்குகள் வாங்கிட்டு 234 தொகுதியிலும் போட்டிபோட்டு விட்டு நாங்கள் 5.3 சதவிகிதம் ஓட்டு வாங்கிவிட்டோம் என தலைவர் மார்தட்டி சொல்கிறார். மூனாவது பெரிய கட்சியாம். தேர்தலில் தனியாக நிற்க வேண்டாம். நம்மிடம் சக்தி இல்லை. சக்தியை இழந்து கிடக்கிறோம். ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என நீங்கள் வற்புறுத்தினீர்கள். கட்சிகளுடன் கூட்டணி இதனால் மாறி மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்து 20 எம்எல்ஏக்கள், 25 எம்எல்ஏக்கள், 18 எம்எல்ஏக்கள், 6 எம்பிக்கள், 10 ஆண்டுகாலம் 2 மத்திய அமைச்சர்கள் என பாமகவின் செல்வாக்கு உயர்ந்தது.

அப்போது தனியாக நிற்க வேண்டாம் என நாங்கள் சொன்னது சரிதான் என நீங்கள் சொன்னீர்கள். தற்போது நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளோம்.

திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் வேலை செய்து நம்முடைய கட்சிக்காரர்களே பாமகவுக்கு குழி பறித்தனர். இதனால் 2 தொகுதிகளை இழந்தோம். அந்த தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும். அந்த வியாதி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது. இது தொடராமல் தடுப்பதற்கு ஒரே வழி திண்ணை பிரச்சாரம். சமூக வலைதளம் ஆகியவற்றின் மூலம் பிரச்சாரம் செய்வதுதான். 

எம்புட்டு அதுப்பு பாருங்க. அதான் கட்சி நக்கிட்டு போகுது. pic.twitter.com/1EbGzs9ZRS

— Savukku_Shankar (@savukku)

 

வரும் சட்டசபை தேர்தலில் பாமக ஆட்சி அமைக்க வேண்டும். அன்புமணிக்கு என்ன குறை உள்ளது, திறமையானவர். அவரது தலைமையில் பாமகவின் ஆட்சி அமைய வேண்டும். ஊர் ஊராகச் சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். எம்எல்ஏக்கள் அவர்கள் கொடுக்கும் உணவை அருந்தி அவர்கள் வீட்டில் படுத்து உறங்கி 100க்கு 40 சதவீத வாக்குகளை பெற்று 60 எம்எல்ஏக்களை பெற வேண்டும்'' என அவர் தெரிவித்தார்.
 

click me!