இராமநாதபுரம்: போலி ஐஏஎஸ் பிரகாஷ் கைது... சினிமா பிரபலங்கள் இவருடன் தொடர்பு..? விரைந்தது தனிப்படை போலீஸ் .!

By T BalamurukanFirst Published May 31, 2020, 9:08 PM IST
Highlights

போலி ஐஏஎஸ் அதிகாரி டி.என்.பி.எஸ்.சி-ல் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பிரகாஷ் என்ற நாகப்பன் மற்றும் ஜார்ஜ் பிலிப் ஆகியோர் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதில் அவர்கள் சினிமா பிரபலங்கள், அரசியல் பெரும் புள்ளிகள் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் போலீசாருக்கு சிக்கியுள்ளன. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்.

 ராமநாதபுரம் நகர் பகுதியில் புளிக்காரத் தெருவைச் சேர்ந்த டெய்சி என்பவர், தன் மகன் உள்பட மூன்று பேருக்கு டிஎன்பிஎஸ்சி, ஐஏஎஸ் உள்ளிட்ட பணிகளில் வேலை வாங்கித் தருவதாக பிரகாஷ் என்ற நாகப்பன் ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார்.

அதாவது தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு தலா ஐந்து லட்சம் என மூன்று பேரிடமும் 15 லட்சம் ரூபாய் வரை வாங்கி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் ரகசிய எண்ணுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகப்பன் என்ற பிரகாஷ், ஜார்ஜ் பிலிப் ஆகியோரை தேடிவந்த நிலையில் முக்கிய குற்றவாளியான நாகப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜார்ஜ் பிலிப்பை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 
கைதானவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல ரகசிய வீடியோக்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதாவது பிரபலங்கள் உடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை கொண்டு தலைமைச் செயலகம் வரை அனைவரையும் தெரியும் என கூறியிருக்கின்றனர்.

இதன்மூலம் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் பகுதியில் பல பேரிடம் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு மீண்டும் ஜாமீனில் வெளியே வந்தார்.ஆனால் மறுபடியும் மோசடி வேலைகளில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையில் மேலும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
click me!