கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்... 48 மணி நேரத்தில் கட்சி மாறிய வேட்பாளர்!

By vinoth kumarFirst Published Nov 1, 2018, 2:14 PM IST
Highlights

கர்நாடக அரசியலில் யாரும் எதிர்பாராத விதமாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ராம்நகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காங்கிரசில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கர்நாடக அரசியலில் யாரும் எதிர்பாராத விதமாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ராம்நகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காங்கிரசில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு 48 மணி நேரம் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி உள்ளார். 

கர்நாடகாவில் சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ராமநகர் தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முதல்வருமான குமாரசாமியின் மனைவி அனிதா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக சந்திரசேகர் நிறுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அப்போது அவர் கூறுகையில் தனக்காக பாஜக தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. ஆதரிக்கவும் இல்லை என்று புகார் தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளர் கட்சி தாவியதையடுத்து ராம்நகரில் போட்டியிடும் கர்நாடகா முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதாவின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

click me!