‘பசுவை கொன்றால் தூக்குதான்’ சத்தீஸ்கர் முதல் அமைச்சர் எச்சரிக்கை

 
Published : Apr 01, 2017, 08:54 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
‘பசுவை கொன்றால் தூக்குதான்’ சத்தீஸ்கர் முதல் அமைச்சர் எச்சரிக்கை

சுருக்கம்

raman singh

பசுவை கொன்றால் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று சத்தீஸ்கர் முதல் அமைச்சர் ராமன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உ.பி.யில் அதிரடி

உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை மூடப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இறைச்சி கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பசுவை கொல்வதற்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை போன்று சத்தீஸ்கரின் எடுக்கப்படுமா என்று பத்திரிகை நிருபர்கள் முதல் அமைச்சர் ராமன் சிங்கிடம் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், பசுவை கொல்வது போன்ற சம்பவங்கள் ஏதும் சத்தீஸ்கரில் நடைபெறவில்லை.

முழு கட்டுப்பாடு

குறிப்பாக கடந்த 15 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை பசுவை எவரேனும் கொன்றால் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.

சத்தீஸ்கரில் பசு, எருமை, காளை மற்றும் கன்றுக்குட்டிகளை கொல்வதற்கோ அவற்றின் இறைச்சிகளை வைத்திருப்பதற்கோ அனுமதி இல்லை. இதேபோன்று வெளி மாநிலங்களுக்கு இறைச்சிக்காக ஏற்றுமதி செய்யப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது.

மம்மி - யம்மி

இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் இறைச்சி கடை உரிமையாளர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு இறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாசுதீன் உவைசி கூறுகையில், பாஜகவை பொருத்தவரையில் உத்தரப்பிரதேசத்தில் பசு என்பது ‘மம்மி’ (தாயை போன்றது). ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் அக்கட்சிக்கு பசு என்பது ‘யம்மி’(சுவை மிகுந்த பண்டம்). 3 வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு மாட்டு இறைச்சி மிக எளிதாக கிடைக்கும். அதைவிட பாஜக ஆளும் கோவாவில் மாட்டு இறைச்சிக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது’ என்றார்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்