
அதிமுகவுக்கும், நமது எம்ஜிஆருக்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் - காரியம் ஆக வேண்டுமெனில் எம்ஜிஆருடனேயே தொடர்பில்லை என்பார்கள்!' என தனக்கே உரிய பாணியில் கலாய்த்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ் கலாய்த்துள்ளார்.
நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தனது அறிக்கை மூலமாக கண்டனம் தெரிவிப்பதும், அரசியல், கல்வி, சமூக அக்கறையுள்ள விஷயங்களை தனது அறிக்கையில் நேரடியாக தனது எதிர்ப்பினை பதிவு செய்வார்.
பொருளாதாரம் சம்பந்தமான விஷயங்களை புள்ளிவிவரமாக மக்களுக்கு சொல்வதில் வல்லவரான பாமக நிறுவனர் ராமதாஸ் கைதேர்ந்தவர், சோசியல் மீடியா வாயிலாக தனக்கே உரிய பாணியில் இளைஞர்களுக்கு நிகராக கலாய்ப்பதில் கைதேர்ந்தவர்.
அதுவும் அரசியல் தலைவர்களை வலைதளங்களில் வளைத்து வளைத்து கலாய்ப்பதில் ராமதாசுக்கு நிகர் ராமதாஸேதான். தேசிய தலைவர்கள் முதல் நம்ம ஊரு லோக்கல் பார்ட்டி லீடர் வரை ராமதாஸின் ட்விட்டர் வருவலில் சிக்காதவர்களே இல்லை என்று தான் சொல்லணும்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மத்திய அரசுக்கு அஞ்சி பழனிசாமி இருந்துவரும் நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் மோடி அரசுக்கு எதிராக வெளியான இந்த கருத்து பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து பாஜகவின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயத்தில் பழனிசாமி தரப்பு இன்று அமைச்சர் ஜெயக்குமாரை விட்டு விளக்கம் அளித்திருக்கிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், அ.தி.மு.கவின் அதிகாரப்பூர் நாளிதழான நமது எம்.ஜி.ஆரில் வெளிவந்த செய்திக்கும், தமிழக அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை நமது எம்.ஜி.ஆரில் வெளிவந்த கருத்து அவர்களின் சொந்த கருத்து என்றும் அதற்கும் தமிழக அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமாரின் இந்த பேட்டிக்கு டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; ' அதிமுகவுக்கும், நமது எம்ஜிஆருக்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் - காரியம் ஆக வேண்டுமெனில் எம்ஜிஆருடனேயே தொடர்பில்லை என்பார்கள்!' என தனக்கே உரிய பாணியில் கலாய்த்துள்ளார்.
ஏற்கனவே ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ட்விட்டிய செய்திகளை தனி புத்தகமே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.