
2018 ல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் எனவும், முதலீட்டுக்கு உகந்த சூழலில் எப்போது தமிழகம் திகழ்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது.
9 நாடுகள், 23 பங்குதாரர் நிறுவனங்கள் இணைந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டன. இம்மாநாடு மூலம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதைவிட இரு மடங்காக ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி அளவுக்கு முதலீடு கிடைத்தது.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தமிழக அரசு அறிவித்தபடி இந்த ஆண்டு முதலீட்டாளர் மாநாடு நடைபெற வேண்டும். ஆனால் இதுவரை நடைபெறவில்லை.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் 3 ஆவது தென்மண்டல மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, 2018 ல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் எனவும், முதலீட்டுக்கு உகந்த சூழலில் எப்போது தமிழகம் திகழ்வதாகவும் தெரிவித்தார்.