
தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களககாகவே அர்ப்பணித்தவர் கருணாநிதி என்றும், தமிழக அரசியலில் இரண்டறக் கலந்துள்ளார் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பாராட்டுத் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94 ஆவது பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற வைரவிழா ஆகியவை இன்று நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்டமான விழா நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்த வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, கருணாநிதிக்கு நடத்தப்படும் இந்த வைர விழா எந்தவித உள்நோக்கமுமின்றி நடத்தப்படுவதாக தெரிவித்தார். அவரது சட்டமன்ற பணிகளை பாராட்டும் விதமாகவே விழா நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி இந்த விழா நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 60 ஆண்டுகளில் கருணாநிதி சட்டமன்றத்தில் ஆறிறிய உரையில் எதுமே அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை என்பதும் அவ்வளவு கண்ணியம் நிறைந்தவர் என்றும் திருநாவுக்கரசர் பாராட்டினார்.
தமது வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் என்றும், தமிழக அரசியலில், இரண்டற கலந்ததுதான் கருணாநிதியின் வாழ்க்கை என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.