
தமிழக அரசியல் சாக்கடையை விட நாறுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக என்று உவமை கொடுத்து எழுதும் அளவுக்கு தமிழக அரசியல் களம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சிதறிப் போன அதிமுகவின் இரு அணிகளும் நீயா? நானா? என்று குத்துச்சண்டைப் போட்டியைப் போல குஸ்தியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.
எதிரியே இல்லாத போர்க்களத்தில் கைகளில் வாள்களை வைத்துக் கொண்டு திராவிட முன்னேறக் கழகம் யுத்தத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது. இது தான் சரியான தருணம், முந்திக் கொண்டால் மட்டுமே வாழ்வு எனக் கருதிய இதரக் கட்சிகள் அறிக்கைகளை அள்ளித் தெளித்து துண்டு போட்டு வைத்துவிட்டது.
போதாத குறைக்கு நடிகர் ரஜினிகாந்த், போர் வரட்டும் பார்த்துக் கொள்வோம் என்று கூறி தனது அரசியல் பிரவேசத்திற்கான தொடக்கப் புள்ளியை ராகவேந்திரா மண்டபகத்தில் வைத்து எழுதிவிட்டார்.
கட்சிகளை விமர்சனம் செய்ய வேண்டிய ரஜினி, சமூக வலைத்தளங்களில் தன்னை விமர்சிக்கும் மக்களை தரம் தாழ்ந்து போய்விட்டனர் என்று கூறி சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
தமிழர்களை இழிவாகப் பேசியதாகக் கூறி கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அவரது உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி உள்ளனர்.
இப்படியாக இருக்கிறது இன்றைய தமிழக நிலவரம் இந்தச் சூழலில் தமிழக அரசியலை சாக்கடையுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்.
மயிலாப்பூரில் நேற்று அக்கட்சியின் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ராமதாஸ்," எதைப்பற்றி பேசுவது, எது குறித்து பேசினாலும் வேதனையாகத்தான் இருக்கு. எங்கும் ஊழல், எதிலும் ஊழல். பெண்கள் மதுவுக்கு எதிராக போராடுகிறார்கள். அவர்களை கொச்சை வார்த்தையில் பேசுவது வேதனை அளிக்கிறது.தமிழக அரசியல் சாக்கடையை விட மிக மோசமாக நாத்தம் வருகிறது. கொந்தளித்திருக்கிறார் பா.ம.க.நிறுவனர் ராமதாஸ்