
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் என்னுடைய அருமை நண்பர், நான் எதை செய்தாலும் அதை காப்பி அடிப்பார் என மயலப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி பேசியுள்ளார்.
உச்ச நீதி மன்றம் சார்பாக 3321 மதுக்கடைகளை மூட வழிவகை செய்த பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு மயலப்பூரில் உள்ள மயிலை பகுதில பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக பாரட்டு பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த பொதுக்கூட்டத்தில் இராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஏ.கே மூர்த்தி அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அன்புமணி; தமிழ்நாட்டில் எந்த பிரச்னை வந்தாலும், எந்த மக்களுக்கும் வந்தாலும் எந்த மூளையில் வந்தாலும் அதுக்கு முதலில் குரல் கொடுப்பவர் ராமதாஸ் தான்.
கடந்த ஆண்டு மே 19 தேர்தல் முடிவுகள் வந்த நாள், மீண்டும் ஊழல் ஆட்சி வந்த நாள். நிர்வாக திறமையில்லாத ஆட்சி, 100 முறை அமைச்சர்களை மாற்றியமைத்த ஆட்சி, இந்தியாவிலே முதல்வர் ஊழலுக்காக சிறை சென்ற ஆட்சி தமிழகத்தில் தான் நடந்தது.
எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் 21 தேதி ஒரு கையெழுத்தைப் போட்டு மதுவிலக்கை கொண்டு வந்த்துயிருப்போம்.
சட்டம் ஒழுங்கு இல்லாத தமிழ்நாடு
தமிழகத்தில் தற்போது நிர்வாக கடன் மூன்று லட்சத்து கோடி. இதற்கு ஜெயலலிதாவின் ஊழல் ஆட்சி தான் காரணம். தி.மு.க அ.தி.மு.க இரண்டையும் ஒதுக்குங்கள் அப்போதுதான் நீங்க, உங்க பசங்க எல்லாரும் நல்லாயிருப்பாங்க அதுமட்டுமல்ல ஒவ்வொரு தலைக்கும் 79 ஆயிரம் கடன் வாங்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாலின் அவர்கள் மம்மூட்டி வைத்து தூர்வாரினார் என பத்திரிக்கையில் படித்தேன். ஸ்டாலினுக்கு தெரியுமா? எத்தனை குளங்கள் ஆறுகள் இருக்குனு தெரியுமா??
தூர்வாருவது என்னவென்ரால் அவருக்கு தெரியுமா? Water management என்றால் என்ன தெரியுமா? நீர்நிலைகள் காணமல் போனதுக்கு காரணம் தி.மு.காவும் அதிமுகாவும் தான் காரணம். திமுகாவும் அதிமுகாவும் காலாவதி ஆகிவிட்டது.
அதுமட்டுமல்ல ஸ்டாலின் என்னுடைய அருமை நண்பர், நான் எதை செய்தாலும் அதை காப்பி அடிப்பார். தமிழ்நாடு அவசர சிகிச்சை பிரிவில் இருக்கு, ரொம்ப மோசமான நிலையில் இருக்கிறது.
தொடர்ந்து பேசிய அவர் எம்.ஜி.ஆர் கேரளா இருந்து வந்தார் ஆண்டார், ஜெயலலிதா கர்நாடகவில் இருந்து வந்தார் ஆண்டார், கருணாநிதி ஆந்திராவில் இருந்து வந்தார் ஆண்டார்.