
விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்கும் வகையில் அது குறித்து விவாதிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பாக பாமக . நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்… நிவாரண உதவியை உயர்த்தி வழங்க வேண்டும்… காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முதல் டெல்லி வரை ஏராளமான விவசாய அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவர்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிய வேண்டும் என்ற எண்ணம் கூட மத்திய, மாநில அரசுகளுக்கு அரசுக்கு ஏற்படவில்லை என ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு பிறகாவது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண தமிழக அரசு முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ள ராமதாஸ். அனைத்துக்கும் மத்திய அரசின் உதவியை எதிர்பார்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள நிலையில், தமிழக விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக் கடனை தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும். என்றும் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை தமிழக முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்,
ஏற்கனவே விவசாயிகளின் பிரச்சனை குறித்து விவாதிக்க நாளை திமுக சார்பில் சென்னையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் ராமதாஸ் தனி ரூட்டு போட்டு, ஸ்டாலினை வம்புக்கு இழுக்கிறார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.