
ஓபிஎஸ் அணி சார்பில் மாணவ-மாணவிகளுக்கு பயனளிக்கும் வகையில் தொடங்கப்பட்ட அம்மா கல்வியம் திட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து பயன் பெற்றுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழக மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி சேவை வழங்குவற்காக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இந்த இணையதள கல்வி சேவையை கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தொடங்கி வைத்தார்.
www.ammakalviyagam.in என்ற இந்த இணைய தளத்தில் மேல் நிலைகல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச பாடப்பயிற்சி, நுழைவித் தேர்வுக்கான பயிற்சி, வேலை வாய்ப்புக்கான பயிற்சி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த அம்மா கல்வியக இணைய தளத்தில் இதுவரை 2 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் இணைந்துள்ளதாகவும், பிரபல ஆசிரியர்கள் மூலமாக பாடங்கள் பயிற்றவிக்கப்படுவதாகவும் ஓபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தின் மூலம் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்று வருவதால், நாளுக்கு நாள் இதில் இணையும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் அவ்கள் தெரிவித்தனர்.,