துணை பொது செயலாளர் பதவியில் இருந்து விலகவேண்டும்:அமைச்சர்களின் எதிர்ப்பால் கொதிப்படைந்த தினகரன்!

 
Published : Apr 15, 2017, 08:50 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
துணை பொது செயலாளர் பதவியில் இருந்து விலகவேண்டும்:அமைச்சர்களின் எதிர்ப்பால் கொதிப்படைந்த தினகரன்!

சுருக்கம்

ministers against ttv dinakaran

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, விஜயபாஸ்கரை தவிர, அமைச்சர்கள் பலரும், தினகரன் வீட்டுக்கு படையெடுத்து வாழ்த்து கூறியுள்ளனர். அவர்களுடன் தம்பிதுரையும் வந்து வாழ்த்து தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, கொங்கு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர், உங்களோடு அதிக நெருக்கத்துடன் இருந்ததன் காரணமாகவே, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு நடந்துள்ளது என்று ஆரம்பித்தார்.

எனவே, கட்சிக்கும், ஆட்சிக்கும் அவரால் ஏற்பட்டிருக்கும் கேட்ட பெயரை நீக்க, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று கூறிவிட்டு, சந்தடி சாக்கில், நீங்களும் கொஞ்ச நாள் துணை பொது செயலாளர் பதவியில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்றும் வெளிப்படையாகவே பேசிவிட்டார்.

நீங்கள் பொறுப்பில் இருந்தால் தான், உங்கள் பேச்சை கேட்போம் என்று நினைக்க வேண்டாம், நீங்கள் வெளியில் இருந்து சொன்னாலும், அதை அப்படியே கேட்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.

அமைச்சரிடம் இருந்து, அப்படி ஒரு வார்த்தை வரும் என்று சற்றும் எதிர்பார்க்காத தினகரன் மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

பின்னர் ஒரு வழியாக சுதாரித்துக்கொண்டு, கோபத்தை வெளியில் காட்டாமல், நான் பொறுப்பில் இருப்பதால்தான், கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது, பொறுப்பில் இல்லை என்றால் நான் சொல்வது எதுவும் எடுபடாது என்று கூறி சமாளித்து இருக்கிறார்.

தர்ம சங்கடமான நிலையை உணர்ந்த தம்பிதுரை குறுக்கிட்டு, தற்போது இருக்கும் நிலையில், பிரச்சினையை எப்படி சரி செய்ய வேண்டும்? என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, யாரையும் பதவியில் இருந்து நீக்குவது பிரச்சினைக்கு தீர்வாகாது என்று கூறியுள்ளார்.

அத்துடன், நாம் எப்போது நமக்குளேயே அடித்துக் கொள்வோம், எப்போது ஆட்சி கலையும் என்று சிலர் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாமே வழி ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் சொல்லி எச்சரித்திருக்கிறார். 

அதன் பிறகே, அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அமைச்சர்களின் மனதில் என்ன இருக்கிறது? என்பதை, நேரடியாக அறிந்து, தினகரன் சஞ்சலம் அடைந்ததாகவே சொல்லப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!