விவசாயிகள் பிரச்சனையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட திமுக வுக்கு உரிமையில்லை…தடாலடி தமிழிசை…

 
Published : Apr 15, 2017, 07:40 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
விவசாயிகள் பிரச்சனையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட திமுக வுக்கு உரிமையில்லை…தடாலடி தமிழிசை…

சுருக்கம்

No rights to dmk

தமிழக விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட திமுக,வுக்கு உரிமையில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக திமுக- பாஜக இடையே மோதல் முற்றி வருகிறது. பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன், முதலில் உங்கள் கட்சி காலூன்ற முடியுமா என பாருங்கள் என பதிலடி கொடுத்தார். இதே போன்று தமிழிசையும் பாஜக விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்  பேசிய தமிழிசை, விவசாயிகளின் பிரச்னைக்கு அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த திமுகவும்தான்  காரணம் தெரிவித்தார்.

திமுக  ஆட்சி காலத்தில் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும்  10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக தமிழக விவசாயிகளுக்காக எந்த ஒரு தொலை நோக்குத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை என கூறினார்.

விவசாயிகளின் நலனில் கொஞ்சம்கூட அக்கறையில்லா திமுக வுக்கு அனைத்துக் கட்சிச் கூட்டத்தை கூட்ட எந்தவித தார்மீக  உரிமையும் இல்லை என தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!