எஸ்.சி.,எஸ்.டி வன்கொடுமையால் வேட்டையாடப்படும் அப்பாவிகள்... மிருகத்தனத்தைக் கண்டித்து ராமதாஸ் பாய்ச்சல்..!

By Thiraviaraj RMFirst Published Oct 2, 2019, 2:32 PM IST
Highlights

 எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை வழக்கால் தீண்டாமை குறித்த பொய்யான புகாரில் அப்பாவிகளை கைது செய்வது பெரும் பாவச்செயல், மாபெருங்குற்றம், மிருகத்தனமான நடவடிக்கை என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல். அதேநேரத்தில் தீண்டாமை குறித்த பொய்யான புகாரில் அப்பாவிகளை கைது செய்வது பெரும் பாவச்செயல், மாபெருங்குற்றம், மிருகத்தனமான நடவடிக்கை.

வன்கொடுமை தடுப்பு சட்டப்படி அளிக்கப்படும் புகார்கள் மீது விசாரணையின்றி கைது செய்ய அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யானைப் பாகனின் கைகளில் இருந்து அங்குசத்தை பிடுங்கும் செயல் ஆகும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ற ஆயுதத்துடன் அப்பாவிகள் வேட்டையாடப்படுவதற்கே இது வழி வகுக்கும்.

வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதும், பொய் வழக்குகள் பதிவு செய்யப் படுவதும் ஜாதி அமைப்பின் தவறு அல்ல. மனிதத்தின் தோல்வி என்றால் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் கடமை அல்லவா? அவ்வாறு செய்யாதது உச்சநீதிமன்றத்தின் தோல்வி அல்லவா?

2.வன்கொடுமை தடுப்பு சட்டப்படி அளிக்கப்படும் புகார்கள் மீது விசாரணையின்றி கைது செய்ய அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யானைப்பாகனின் கைகளில் இருந்து அங்குசத்தை பிடுங்கும் செயல் ஆகும்.உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ற ஆயுதத்துடன் அப்பாவிகள் வேட்டையாடப்படுவதற்கே இது வழி வகுக்கும்!

— Dr S RAMADOSS (@drramadoss)

 

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது நாளில் அகிம்சை நாயகனையும், அவருடன் இணைந்து இந்தியாவின் விடுதலைக்காக உழைத்த லட்சக்கணக்கான தூய உள்ளங்களையும் போற்றுவோம். அவர்கள் காண விரும்பிய இந்தியாவை உருவாக்க உழைப்போம்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!