பாவம்யா அவரு இப்படியா பங்கம் பண்ணுவீங்க? கருத்து சொன்ன ராமதாஸை உள்ளே புகுந்து கலாய்த்த நெட்டிசன்ஸ்...

By sathish kFirst Published Oct 2, 2019, 1:44 PM IST
Highlights

திமுக எம்பி செந்தில்குமார் டாக்டர் ராமதாஸை அவரது ட்விட்டர் பக்கத்திலேயே சென்று கலாய்த்த இணையத்தில் பயங்கரமான வைரலான நிலையில், நெட்டிசன்களும் என்ன கருத்து சொன்னாலும் மானாவாரியாக புகுந்து பங்கம் பண்ணும் சம்பவம் இன்றும் நடந்துள்ளது.

திமுக எம்பி செந்தில்குமார் டாக்டர் ராமதாஸை அவரது ட்விட்டர் பக்கத்திலேயே சென்று கலாய்த்து இணையத்தில் பயங்கரமான வைரலான நிலையில், நெட்டிசன்களும் என்ன கருத்து சொன்னாலும் மானாவாரியாக புகுந்து பங்கம் பண்ணும் சம்பவம் இன்றும் நடந்துள்ளது.

இன்று காந்தி பிறந்த நாள் என்பதால் வழக்கம் போல ஒரு கருத்தாக டிவீட் போட பயங்கரமாக கலாய்த்துள்ளனர்.

தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல். அதேநேரத்தில் தீண்டாமை குறித்த பொய்யான புகாரில் அப்பாவிகளை கைது செய்வது பெரும் பாவச்செயல், மாபெருங்குற்றம், மிருகத்தனமான நடவடிக்கை.

2. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அளிக்கப்படும் புகார்கள் மீது விசாரணையின்றி கைது செய்ய அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யானைப்பாகனின் கைகளில் இருந்து அங்குசத்தைப் பிடுங்கும் செயல் ஆகும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ற ஆயுதத்துடன் அப்பாவிகள் வேட்டையாடப்படுவதற்கே இது வழி வகுக்கும்!

3. வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதும், பொய் வழக்குகள் பதிவு செய்யப் படுவதும் ஜாதி அமைப்பின் தவறு அல்ல... மனிதத்தின் தோல்வி என்றால் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் கடமை அல்லவா? அவ்வாறு செய்யாதது உச்சநீதிமன்றத்தின் தோல்வி அல்லவா?

ராமதாஸின் இந்த டிவீட்க்கு,  ஏன் குடிசை கொளுத்தும் பொழுது வழக்கு அதிகம் ஆகிறதா? பயந்திட்டியா குமாரு?  என போன்ற மானாவாரியாக கலாய்த்து தள்ளுகின்றனர்.

கடைசியாக , தமிழ்நாட்டில் டெங்கு உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நிலவேம்பு  கசாயம் வழங்கும் முகாம்கள் நடத்தப்படும்! எனற டிவீட்டுக்கு இந்த மேட்டர் உங்க ஓனர் எடப்பாடிக்கு தெரியுமா டாக்டரே என வெறுப்பேத்திவிட்டு சென்றுள்ளனர்.

click me!