எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்...!! ஒரு கோடி மக்களை சந்திக்கப்போவதாக அதிரடி...!! யாருங்க அந்த எம்எல்ஏ...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 2, 2019, 1:30 PM IST
Highlights

சட்டசபையிலும் இக்கருத்தை பல முறை பதிவு செய்துள்ளதாக கூறிய அவர்.  மதுவுக்கு எதிரான இப் பரப்புரையில் சுமார் 1 கோடி மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிரடி காட்டினார். 

காந்தியடிகளின் 150 வது பிறந்த தினத்தயொட்டி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மது எதிர்ப்பு பரப்புரை சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கியது. அதில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான  தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு பரப்புரையை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். காந்தியாடிகளின் 150 வது பிறந்த நாளான இன்று, அவரது மது எதிர்ப்பு கொள்கையை மஜக முன்னெடுத்திருக்கிறது என்றார்.

சென்னையில் இன்று மஜக நிர்வாகிகள் ஒன்று கூடி மது எதிர்ப்பு  உறுதி மொழி பரப்புரையை தொடங்கி வைத்துள்ளோம் என்ற அவர், துண்டு பிரசுர வினியோகம், சுவரெழுத்து, சுவரொட்டி, பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள், வீதி முனை கூட்டங்கள், ஊடக செய்திகள், சமூக இணையதள கருத்தாக்கங்கள், தனிநபர் மற்றும் குழு சந்திப்புகள், ஒலி-ஒளி பதிவுகள், வாகனப் பரப்புரைகள், மது எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றல், மதுவுக்கு எதிரான முழக்கங்கள் என 12 வகையான வடிவங்களில் மாஜகவின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் , மது எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பனியன்களுடன்  களப்பணியாற்ற உள்ளனர் என்றார்.

நகரங்கள், கிராமங்கள் என அக்டோபர் 15 வரை பரப்புரைகள் செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பூரண மது விலக்கை அமல்படுத்துவோம் என்று கூறி, 500 டாஸ்மாக் கடைகளை முதல் கட்டமாக மூடினார்.அந்த வழியில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  அவர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்,  சட்டசபையிலும் இக்கருத்தை பல முறை பதிவு செய்துள்ளதாக கூறிய அவர்.  மதுவுக்கு எதிரான இப் பரப்புரையில் சுமார் 1 கோடி மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிரடி காட்டினார்.மஜக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், மஜக வின் மது எதிர்ப்பு பரப்புரை பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.

மஜக நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டு மது எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றனர். பின்னர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் வாகனஓட்டிகளிடம்  மது எதிர்ப்பு துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.சென்னை மண்டலம் முழுக்க அதிதீவிரமாக களப்பணியாற்றும் முனைப்போடு, மாஜக தொண்டர்கள் களப்பணியில் இறங்கியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர்கள் மஜகவின் இந்த திடீர் பிரச்சார அறிவிப்பு அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் யுக்தி என்று கூறியுள்ளனர்.

click me!