தலித்துகளுக்கு முக்கியத்துவம் பாஜக ஆட்சியில் மட்டுமே... பட்டியல் போட்டு ஆதாரம் காட்டும் ஹெச்.ராசா..!

By Thiraviaraj RMFirst Published Oct 2, 2019, 1:23 PM IST
Highlights

நாடாளுமன்றத்தில் கடந்த கால ஆட்சிகளில் அதிக தலித் பிரதிநிதித்துவம் அளித்தது பாஜக அரசாங்கம் மட்டுமே என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராசா பெருமைப்பட்டுள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘’நாடாளுமன்றத்தில் தலித்துகளுக்கே அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டதற்கான பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், 2019 மோடி தலைமையிலான பாஜக அரசில் தலித் களுக்கு 10.34 சதவிகிதம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டதாகவும், 2014 மோடி தலைமையிலான மத்திய அரசில் 10.54 சதவிகிதம் இடம் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

2009ம் ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் .86 சதவிகிதமும், அதற்கு முந்தைய அவரது ஆட்சியில் 6.33 சதவிகித பிரதிநிதித்துவமும் அளிக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

1999ல் பாஜக தலைமையிலான வாஜ்பேயி தலைமையிலான ஆட்சியில் 10 சதவிகிதமும், 184ம் ஆண்டும் ராஜீவ் காந்தி ஆட்சியில் 3.67 சதவிகிதமும் 1989ம் ஆண்டு விபிசிங் தலைமையிலான ஆட்சியில் 2.56 சதவிகிதமும், 1977ல் மொரார்ஜி தேசாய் ஆட்சியில் 4.17 சதவிகிதமும், 1952ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான நேரு தலைமையிலான ஆட்சியில் 3.92 சதவிகிதம் தலித் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்  நாடாளுமன்றத்தில் கடந்த கால ஆட்சிகளில் அதிக தலித் பிரதிநிதித்துவம் அளித்தது பாஜக அரசாங்கம் மட்டுமே'’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!