கம்மனாட்டி சொன்னா கோபம் வருதா? உங்களுக்கு மெட்ராஸ்ல அட்ரஸ் கொடுத்ததே நான் தான்... சொல்லிக்காட்டும் ராமதாஸ்!!

By sathish kFirst Published Jun 25, 2019, 1:29 PM IST
Highlights

பத்திரிகையாளர் சங்கத்திற்கு முகவரி (கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சி! பழைய செய்தி தான்- இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக) என பாமக நிறுவனம் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

பத்திரிகையாளர் சங்கத்திற்கு முகவரி (கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சி! பழைய செய்தி தான்- இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக) என பாமக நிறுவனம் ராமதாஸ் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியி ஒன்றில் பத்திரிகையாளர்களை ஏண்டா நாய்களா, கம்னாட்டி பசங்களா, இது கிராமத்து பாஷை. நான் வைத்த மரத்தை வந்துபாருங்கள் ஒரு வருடமாகிறது இதுவரை எந்த நாயும் வந்து பார்க்கவில்லை. அறக்கட்டளை மூலமாக வனமே வைத்துள்ளேன் என் அசிங்க அசிங்கமாக பேசினார். இதற்கு பத்திரிகையார்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து அவர் வீசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க சொன்னது ஆனால், ராமதாஸ் நான் சொன்ன சொன்னது தான் என கூறினார். 

இந்நிலையில், இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பத்திரிகையாளர் சங்கத்திற்கு முகவரி என்று கூறியுள்ளார். அதில்; பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை அலுவலகம் 63, நாட்டுமுத்து நாயக்கன் தெரு, வன்னிய தேனாம்பேட்டை, சென்னை -18 என்ற முகவரியில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தினப்புரட்சி செயல்பட்டு வந்தது. இந்த விஷயங்கள் பெரும்பான்மையான தமிழக மக்களுக்கு தெரிந்திருக்கக்கூடும்.

ஆனால், பெரும்பான்மையினருக்கு தெரியாத உண்மை.... இதே அலுவலகத்தில் தான் தமிழ்நாடு பத்திரிகையாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது என்பது தான். புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் அண்ணா பாலு, பொதுச்செயலாளர் டி.எஸ்.இரவீந்திர தாஸ் ஆகியோர் என்னை அணுகி தங்கள் சங்கத்துக்கு அலுவலகம் இல்லை என்றும், அதற்கு ஓர் இடத்தை ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக் கொண்டனர். அதையேற்ற நான் பா.ம.க. அலுவலகத்தின் மாடியில் எனது சொந்த செலவில் தற்காலிக அலுவலகம் அமைத்துக் கொடுத்தேன். அது தான் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்திற்கு முதல் முகவரியாகும்.

அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பலரும், பிற பத்திரிகையாளர்களும் எந்த நேரம் வேண்டுமானாலும் அங்கு வரலாம்; தங்கிச் செல்லலாம் என்ற அளவுக்கு பா.ம.க. தலைமை அலுவலகம் பத்திரிகையாளர்களின் புகலிடமாக திகழ்ந்தது. அதுமட்டுமின்றி, அப்போது தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சிறப்பு அழைப்பாளராக நான் கலந்து கொள்வேன். ஒருமுறை திமுக தலைவர் கலைஞரும் என்னுடன் பத்திரிகையாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போதிருந்த பத்திரிகையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இப்போதும் எனது நண்பர்கள் தான். அப்போதைய பத்திரிகையாளர்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் ஊடக அறத்தைக் கடைபிடித்தவர்கள். சிலரது நெஞ்சத்தில் வஞ்சம் இருந்தாலும் பெரும்பான்மையினர் சமூகநீதிக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் தான். அப்போது ஊடகத்துறையில் அறம் உயிரோடு இருந்தது எனக் கூறியுள்ளார்.

click me!