தங்கம் என் 20 ஆண்டுகால நண்பன்... மனவேதனையில் புழுங்கித் தவிக்கும் டி.டி.வி..!

Published : Jun 25, 2019, 12:55 PM ISTUpdated : Jun 25, 2019, 04:21 PM IST
தங்கம் என் 20 ஆண்டுகால நண்பன்... மனவேதனையில் புழுங்கித் தவிக்கும் டி.டி.வி..!

சுருக்கம்

அவரை கட்சியை விட்டு எப்படி நீக்க முடியும்? என்னுடன் 20 ஆண்டுகளாக பழகியவர். அவரை பதவியிலிருந்து மட்டுமே விலக்கி வைக்க நினைத்திருந்தோம். ஆனால்,

கட்சியை விட்டு தங்க தமிழ்செல்வனை நீக்குவதாக அறிவித்தாலும், அமமுக பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன் உள்ளூர மனவேதனையில் இருப்பதை அவரது பேட்டி மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. 

தங்க தமிழ்செல்வன் பற்றி செய்தியாளர்களிடம்பேசிய டி.டி..வி.தினகரன், தங்க தமிழ்செல்வன் இப்போது மட்டுமல்ல. வெகு நாட்களாகவே என்னிடம் ஒன்று பேசி விட்டு வெளியில் ஒன்று பேசி வருகிறார். பலமுறை தேவையில்லாமல் பேசி ஏன் மாட்டிக்கொள்கிறீர்கள் என அறிவுறுத்தி இருக்கிறேன். வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வருகிறார் தங்க தமிழ்செல்வன். நானும் ரொம்ப நாளாக எச்சரித்து வருகிறேன். ஆனாலும் அவர் எங்கள் அணிக்கு வந்ததால் பொறுமை காத்து வந்தேன். 

என்னிடம் நேராக பேசமாட்டார். வெளியில் தான் இப்படி பேசுவார். எனக்கு அறிவுரை கூற அவர் யார்? ஊடகங்கள் அவரை பெரிதாக்கி
ஒரே நாளில் அவரது கதையை முடித்து விட்டன. அவரை கட்சியை விட்டு எப்படி நீக்க முடியும்? என்னுடன் 20 ஆண்டுகளாக பழகியவர். அவரை பதவியிலிருந்து மட்டுமே விலக்கி வைக்க நினைத்திருந்தோம். ஆனால், இனி அவர் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவார். யாரையும் நீக்க வேண்டிய அச்சமோ பயமோ எதுவுமே கிடையாது.

இனி விளக்கம் அவர் நடந்து கொண்டது பற்றி கேட்க விளக்கம் கேட்க முடியாது. அவரது பொறுப்புக்கு மற்றொருவர் அறிவிக்கப்படுவார். தங்க தமிழ்செல்வனை யாரோ பின்னாலிருந்து இயக்குகிறார்கள். தேனியில் நின்று நீ வெற்றிபெற முடியாது என எனக்குத் தெரியும். ஆகையால் மதுரை, அல்லது திண்டுக்கல்லில் போட்டியிட வேண்டும் என தங்கத்திடம் தெரிவித்தேன். ஆனால், அவர் கேட்கவில்லை’’ என அவர் தெரிவித்தார்.  

PREV
click me!

Recommended Stories

நாங்க டப்பா எஞ்சினா? திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!
நாங்க அம்மா வளர்த்த அண்ணன் -தம்பிகள்.. எல்லாத்தையும் மறந்துட்டோம்.. டிடிவி-இபிஎஸ் கூட்டாகப் பேட்டி..!