PMK ராமதாஸே நாடகக்காதல் செய்து ஏமாற்றியவர்தான்... அதிர்ச்சியூட்டும் வன்னியர் கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி..!

Published : Nov 23, 2021, 05:22 PM ISTUpdated : Nov 23, 2021, 05:31 PM IST
PMK ராமதாஸே நாடகக்காதல் செய்து ஏமாற்றியவர்தான்... அதிர்ச்சியூட்டும் வன்னியர் கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி..!

சுருக்கம்

ரைஸ் மில்லில் தங்க வைத்து 15 நாட்கள் கழித்து அந்தப்பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தார்கள். ஆக ராமதாஸே நாடகக் காதலை ஆரம்பித்து வத்தவர்.

இரு ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டு காதல் செய்வதில் தலையிட ராமதாஸ் யார்? என வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்

.

’’ராமதாஸ் நாடக காதல் செய்துதான் கல்யாணம் செய்து கொண்டார். ராமதாஸ்  படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணை காதலித்தார். காதலித்து தப்பு செய்துவிட்டு அந்த பெண்ணை கைவிட்டுவிட்டு ஓடி விட்டார். இதனை தெரிந்த சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணன், தம்பிகள் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த ராமதாசை பிடித்து அழைத்து வந்தார்கள். அப்போது போஸ்ட் மரத்தில் கட்டி வைத்தார்கள்.

பிறகு அங்கு அங்கே இருந்த ஒரு ரைஸ் மில்லில் தங்க வைத்து 15 நாட்கள் கழித்து அந்தப்பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தார்கள். ஆக ராமதாஸே நாடகக் காதலை ஆரம்பித்து வத்தவர். அவர் செய்ததை மற்றவர்கள் செய்யக்கூடாது என்று சொல்கிறார். 

 

யாரோ பிடித்தவர்கள் திருமணம் செய்து கொண்டு போகிறார்கள்? அதை தடுக்க நீங்கள் யார்? நான் யார்? ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கி ஊருக்குள் கலவரமாக்குகிறார் ராமதாஸ். இது அவருக்கு வாடிக்கையாகி விட்டது. ராமதாஸ் ஒட்டுமொத்த வன்னியர்களின் முகம் கிடையாது. சாதி சண்டையை தூண்டிவிடுவது ராமதாஸ்தான். ராமதாசை வை வைத்து வன்னியர்களை எதிர்க்காதீர்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்