jai bhim: சூர்யா வீட்டு நாய் குட்டிகூட மன்னிப்பு கேட்காது.. கேட்க விடமாட்டோம்.. பசும்பொன் பாண்டியன் கலக பேச்சு

By Ezhilarasan BabuFirst Published Nov 23, 2021, 3:49 PM IST
Highlights

சூர்யா அல்ல, சூர்யா வீட்டு நாய்க்குட்டி கூட மன்னிப்பு கேட்காது.. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் என்ன. நாங்கள் அவரை மன்னிப்பு கேட்க விடமாட்டோம், சூர்யா ஒரு நடிகர், அவர்களுடைய வேலையை பார்த்து இருக்கிறார். 

ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யா அல்ல சூர்யா வீட்டு நாய்க்குட்டி கூட மன்னிப்பு கேட்காது என்றும், பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் மிரட்டல் அரசியலை, தாதா அரசியலை கைவிட வேண்டும் என அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், நிர்மலா தேவியின் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். சூர்யா மன்னிப்புக் கேட்க நாங்கள் விடமாட்டோம் என்றும் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. ஆனால் சூர்யா அதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறதார். இந்நிலையில் பாமகவினர் சூர்யாவை தாக்கினால் 1 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என்றும், அவர் வெளியில் நடமாட முடியாது என்றும் அச்சுறுத்தும் வகையில் பேசி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியில் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் சூர்யாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளன. இந்த வரிசையில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், நிர்மலா தேவியின் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் பாமகவை எச்சரிக்கும் வகையில்  யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஏற்கடவே காட்டமாக பேட்டி கொடுத்திருந்தார் அதில், மருத்துவர் ராமதாஸ் அவர்கள் எடுத்த தவறான முடிவின் காரணமாக பாமக என்ற கட்சியே கரைந்துவிட்டது. அவரைப்போலவே அவரது மகன் அன்புமணியும் இருக்கிறார். வன்னிய மக்கள் வலுவாக உள்ள ஐந்து மாவட்டங்களில் கூட பாமக எதிர்பார்த்த அளவு வெற்றி பெற முடியவில்லை. காரணம் அவர்கள் பேசியது ஒன்று செயல்பட்டது ஒன்று, வன்னிய மக்கள் ராமதாசுக்கு ஆதரவாக இல்லை, ஆனால் ஒரு ரவுடி கும்பலை வைத்துக்கொண்டு  தமிழ்நாட்டில் ரவுடித்தனம் செய்யலாம், மிரட்டி பார்க்கலாம் என முயற்சி செய்கிறார் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் பாமகவை எச்சரித்து பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில், ஒரு பாமக மாவட்ட செயலாளர் நடிகர் சூர்யாவை உதைத்தால் ஒரு உதைக்கு ஒரு லட்சம் என கூறுகிறார், இதுதான் வன்முறை பேச்சு இதைக் கண்டித்தால் என்னை தொலைபேசியில் மிரட்டுகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன் சூர்யாவையும் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. ஒரு லட்ச ரூபாய் என அறிவித்திருக்கிறீர்கள், அதற்காக இதுவரை யாராவது முன்வந்தார்களா. என்னை யார் என்று பாமகவினர் கேள்வி எழுப்புகின்றனர், என்னுடைய தரத்த,  தகுதியை, என்னுடைய படைபலத்தை நான் கூற விரும்பவில்லை. தொலைபேசியில் மிரட்டுவதை எல்லாம் நீங்கள் வேறு யாரிடமாவது வைத்துக்கொள்ளுங்கள். தைலாபுரத்தில் ராமதாஸ் மட்டுமல்ல என்னுடைய உறவினர்களும் 40 பேர் இருக்கிறார்கள். நான் கேட்கிறேன், இந்த அளவிற்கு வன்முறையாக பேசுகிறீர்களே தைலாபுரம் என்ன தனித்தீவா.?  நீங்கள் என்ன தீவிரவாதிகளா? இப்போது சூர்யாவுக்காக, அம்பேத்கர் சிந்தனையாளர்கள், பொதுவுடமைவாதிகள், சமூக நீதியில் அக்கறை உள்ளவர்கள் ஓரணியில் திரள்கிறார்கள்.

இப்போது படத்தில் இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்திருக்கிறார் சூர்யா வருத்தம் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நான் சூர்யா சார்பாகவே சொல்கிறேன், சூர்யா அல்ல, சூர்யா வீட்டு நாய்க்குட்டி கூட மன்னிப்பு கேட்காது.. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் என்ன. நாங்கள் அவரை மன்னிப்பு கேட்க விடமாட்டோம், சூர்யா ஒரு நடிகர், அவர்களுடைய வேலையை பார்த்து இருக்கிறார். ஆனால் நீங்கள் இதை வைத்து தாதாவாக பார்க்கிறீர்கள். நீங்கள் என்ன தமிழ்நாட்டில் தாதாவா? மிரட்டிப் பார்ப்பது உருட்டி பார்ப்பது இது எல்லாம் பாமக கும்பல் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார். 

 

click me!