அய்யாவுக்கு ரெண்டு மகன்கள்.. ஒன்று ஜி.கே மணி, மற்றொன்று நான்.. மேடையில் உருகிய அன்புமணி.

By Ezhilarasan BabuFirst Published May 24, 2022, 2:55 PM IST
Highlights

ஐநா சபையிலேயே முதல்முறையாக வேட்டியுடன் அமர்ந்தவர் நம் கட்சி தலைவர் ஜி.கே மணிதான் என  பாமக இளைஞரணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஐநா சபையிலேயே முதல்முறையாக வேட்டியுடன் அமர்ந்தவர் நம் கட்சி தலைவர் ஜி.கே மணிதான் என  பாமக இளைஞரணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் அழைத்தும் போகாத அவர், அய்யா ராமதாசுடன்தான் இருப்பேன் என  25 ஆண்டு காலம் பாமகவின் தலைவராக பணியாற்றி வருகிறார் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து அன்புமணி ராமதாஸை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ்  திட்டமிட்டு வருகிறார். அதன் முன்னோட்டமாக அன்புமணி ராமதாஸ் பாமகவுக்கு செல்வாக்குள்ள வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் பாமக தலைவர் ஜி.கே மணிக்கு வெள்ளி விழா இன்று கொண்டாடப்பட்டது. அதில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ்,ஜிகே மணியை வாழ்த்திப் பேசினார். அதன் விவரம் பின்வருமாறு:- நம் கட்சி தலைவர் ஜிகே மணி என்றால் உழைப்பு தியாகம் என்று அர்த்தம்.

விவசாய குடும்பத்தில் பிறந்து ஆசிரியராகப் பணியாற்றியவர், பின் பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்களுக்கு சேவையாற்றியவர், அவர் ஆற்றிய சேவையை கண்டு அதிமுகவில் இணைத்துக் கொள்ள எம்ஜிஆர் அழைப்பு விடுத்தார், ஆனால் அதை ஏற்க மறுத்து ஐயாவுடன் இணைந்து மக்களுக்கு தொடர்ந்து பணி செய்து வருகிறார். இன்று நடைபெறும் பாராட்டு விழா பொது விழாவாக இருந்திருந்தால் அனைத்து கட்சி தலைவர்களும் விழாவுக்கு வந்திருப்பார்கள். ஏனெனில் அனைத்து தலைவர்களையும் நன்கு அறிந்தவர். அனைவரிடமும் நன்கு பழகுபவர் கலைஞருக்கு மன உளைச்சல் இருந்தால் மணிக்கு  அழைப்பு விடுத்து மணிக்கணக்கில் பேசுவார். பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் எப்போதும் அனைவரும் perfect ஆக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அப்படிப்பட்ட ராமதாஸுக்கு 25 ஆண்டுகாலம் தலைவராக பணியாற்றியது தலைவர் ஜிகே மணி செய்த சாதனை.

இது சாதாரண காரியமல்ல, நம் தலைவர் மணியைத் தவிர இதை வேறு யாராலும் செய்ய முடியாது. கட்சி தலைவர் ஜி.கே மணி மிகவும் நேர்மையான முறையில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர். உறங்காமல் உழைக்கக் கூடியவர், அவரது செல்போனுக்கு வாயிருந்தால் அழுது விடும், ஏனென்றால் எப்போதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்ந்து யாரிடமாவது அவர் பேசிக்கொண்டே இருப்பார். அய்யா ஒருவருக்கு பாராட்டு விழா நடத்துவது சாதாரண செயல் அல்ல, நம் தலைவர் ஜிகே மணி நூறாண்டுகள் வாழ வேண்டும், நம் தலைவர் ஐயாவுக்கு 2 மகன்கள் 1 மணி மற்றொருவர் நான். ஐநா சபையிலேயே முதல் முறையாக வேட்டி கட்டி அமர்ந்தவர் தான் நம் கட்சி தலைவர் ஜி.கே மணி. இவ்வாறு அன்புமணி பேசினார். 
 

click me!