மருத்துவத்துறையில் பணிகள் பாதிப்பு..! உடனடியாக இயக்குனர்களை நியமித்திடுக- ஸ்டாலினை வலியுறுத்தும் ராமதாஸ்

Published : Jan 27, 2023, 11:36 AM IST
மருத்துவத்துறையில் பணிகள் பாதிப்பு..! உடனடியாக இயக்குனர்களை நியமித்திடுக- ஸ்டாலினை வலியுறுத்தும் ராமதாஸ்

சுருக்கம்

இயக்குனர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் மருத்துவத்துறை செயல்பாடுகள் பாதிப்புக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ்,  காலியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவத்துறையில் காலிப்பணியிடம்

மருத்துவத்துறை காலிப்பணியிடம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் மொத்தமுள்ள 6 இயக்குனர் பணியிடங்களில் மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவ சேவைகள் இயக்குனர், மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர், இ.எஸ்.ஐ இயக்குனர் ஆகிய 4 இயக்குனர் பணிகள் காலியாக உள்ளன.  பொறுப்பு அதிகாரிகளே அந்த பணிகளை கவனித்துக் கொள்கின்றனர்! மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவ சேவைகள் இயக்குனர் உள்ளிட்ட பதவிகள் பணிச்சுமையும், பொறுப்புகளும் மிகுந்தவை. அவற்றை கூடுதல் பொறுப்பாக இன்னொரு அதிகாரியிடம் வழங்குவதால் பயன் இல்லை. இதனால் மருத்துவத்துறை பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன!


மருத்துவத்துறையில் பணிகள் பாதிப்பு

எடுத்துக்காட்டாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதன்மையர் (டீன்), மருத்துவக் கல்வி இயக்குனர் பதவியை கூடுதலாக கவனிக்கிறார். ஒரு கல்லூரியின் முதன்மையர் பணியை கவனிக்கவே அவருக்கு நேரம் போதாது எனும் நிலையில், மீதமுள்ள 36 மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளை அவரால் எவ்வாறு கண்காணிக்க முடியும்? இயக்குனர் பணியிடங்களை நிரப்புவதில் எந்த சிக்கலும் இல்லை எனும் போது, இயக்குனர்கள் நியமனத்தை அரசு தாமதிப்பது ஏன்? எனத் தெரியவில்லை. மருத்துவத்துறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள 4 இயக்குனர் பணியிடங்களையும் அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

உதயநிதி முன்பாக தொண்டரை சரமாரியாக தாக்கிய அமைச்சர் கே.என்.நேரு.!தலையில் அடித்துக்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!