பாமகவில் நடிகருக்கு துணை தலைவர் பதவி... நடிகர் ரஞ்சித் நியமனம்!! அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்

Published : Sep 18, 2018, 04:03 PM ISTUpdated : Sep 19, 2018, 09:29 AM IST
பாமகவில் நடிகருக்கு துணை தலைவர் பதவி... நடிகர் ரஞ்சித் நியமனம்!! அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்

சுருக்கம்

நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு கடும் எதிர்ப்ப தெரிவித்து வந்த பாமகாவில், நடிகர் ஒருவருக்கு துணை தலைவர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். 

நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு கடும் எதிர்ப்ப தெரிவித்து வந்த பாமகாவில், நடிகர் ஒருவருக்கு துணை தலைவர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கும்போது, அவருக்கு எதிரான நிலைப்பாட்டை கூறி வந்தார். 

நடிகர்கள், அரசியலுக்கு ஏன் வர வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி வந்த நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு கருத்துக்களைக் கூறி வந்தார்.  இந்த நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி அன்று நடிகர் ரஞ்சித், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் பாமகவில் இணைந்தார்.

ஆர்.கே.செல்வமணியின் பொன்விலங்கு படத்தின் மூலம் அறிமுகமான ரஞ்சித், பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நேசம் புதுசு என்ற படத்தில் நடித்தபோது நடிகை பிரியா ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இந்தநிலையில், பாமகவில் இணைந்த நடிகர் ரஞ்சித், பாமகவின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஈரோடு பகுதியைச் சேர்ந்த பொங்கலூர் மணிகண்டன், கொங்குவேலார் சமூகத்தை சேர்ந்தவர். முன்பு கொங்கு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த இவர் பாமகவின் துணைத் தலைவராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த நடிகர் ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் மூலமாகத்தான் பாமகவில் இணைந்துள்ளார்.

பாமகவின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இணைந்தனர். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பாமகவில் இணைந்திருந்தனர். இடையில், பாமகவில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்த நிலையில், மீண்டும் மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இணைக்கப்பட்டு வருகின்றார்கள்.

PREV
click me!

Recommended Stories

TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்
இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!