பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க போகிறதா? இல்ல காங்கிரஸ் தலைதூக்கப்போகிறதா? தெலுங்கானாவில் நடத்தபட்ட சர்வே முடிவுகள்...

By sathish kFirst Published Sep 18, 2018, 3:28 PM IST
Highlights

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் தான் தற்போது அரசியல் வட்டாரத்தின் கவனத்தில் அதிக முக்கியத்துவத்தினை பெற்றிருக்கிறது. ஏற்கனவே மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தான்  மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க போகிறதா? அல்லது காங்கிரஸ் தலைதூக்கப்போகிறதா ? எனும் கேள்வியே இதற்கு காரணம்

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் தான் தற்போது அரசியல் வட்டாரத்தின் கவனத்தில் அதிக முக்கியத்துவத்தினை பெற்றிருக்கிறது. ஏற்கனவே மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தான்  மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க போகிறதா? அல்லது காங்கிரஸ் தலைதூக்கப்போகிறதா ? எனும் கேள்வியே இதற்கு காரணம். தற்போது ஆட்சியில் இருக்கும் மோடி மீது பல அதிருப்திகள் மக்களுக்கு இருந்தாலும் மோடி அலை இன்னும் ஓயவில்லை எனும்படியான தகவலையே சமீபத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தலோடு சட்ட மன்ற தேர்தலையும் சந்திக்க தயாராகிவருகிறது தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்கள். இந்த இரண்டுபகுதிகளிலும் சமீபத்தில் நடத்தப்பட்டிருக்கும் கருத்து கணிப்பு முடிவுகள் தான் அரசியல் வட்டாரத்தில் இப்போது ஹாட் டாப்பிக். இதில் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதையும் , சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதையும் வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றது.

இந்த ஆய்வை நடத்திய ஆக்ஸிஸ் இந்தியா அமைப்பும், இந்தியா டுடே பத்திரிக்கையும். இம்மாநிலத்தின் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் அடிப்படையில் ,7110 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு  நடத்தப்பட்டிருக்கிறது.

இதில் தெலுங்கான விவகாரத்தை முதலில் பார்க்கும் போது முதல்வர் சந்திரசேகர ராவின் முடிவுக்கு இணங்க மறுத்து சட்டமன்றம் கலைக்கப்பட்டதால், முன்கூட்டியே தேர்தலை சந்திக்கவுள்ளது தெலங்கானா மாநிலம். ஆனாலும் தெலுங்கானாவின் சட்டமன்ற தேர்தல் சூழ்நிலை என்னவோ, சந்திரசேகர ராவிற்கு தான் சாதகமாக அமைந்திருக்கிறது.

சட்ட மன்றம் கலைக்கப்பட்டதற்கு பிறகும் சந்திரசேகர ராவ் தான் முதல்வர் பதவியில் இப்போதைக்கு  தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதி, தேர்தலில் தனித்துப் போட்டியிடவிருக்கிறது. ஏற்கனவே தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியின் சார்பில் 105 தொகுதிகளுக்கு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்
அதேசமயம் தெலங்கானா ராஷ்டிரிய சமீதிக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள்  ஒன்றிணைந்து வலுவான புதிய கூட்டணி அமைத்திருக்கின்றன. 

இதனால் தேர்தலுக்கு முன்னதாகவே சூடுபிடித்திருக்கிறது தெலுங்கானாவின் அரசியல் களம். என்ன தான் பிற கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்தாலும் , சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தான் அதன்  போட்டிக் கட்சிகளை விட மிகவும் முன்னணியில் உள்ளது என  கருத்துக் கணிப்பு  முடிவுகள் தெரிவிக்கின்றன.இந்த கருத்து கணிப்பின் முடிவின் படி  43 சதவிகிதத்தினர் சந்திர சேகர் ராவுக்கு ஆதரவாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது. 

மீதமுள்ளவர்களில் 18 சதவிகிதம் பேர் தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர்  உத்தம் குமார் ரெட்டிக்கு தரவளித்திருக்கின்றனர். 15 சதவிகிதம் பேர் பிஜேபியின் கிஷன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர் .  இதில் 48 சதவிகிதம் பேர் சந்திரசேகர ராவின் அரசாங்கம் திருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். 26 சதவிகிதம் பேர் இந்த அரசு மோசமான அரசாங்கம் என தெரிவித்திருக்கின்றனர். 16 சதவிகிதம் பேர் சுமார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதில் சுமார் என்று கருத்து தெரிவித்திருப்பவர்களும் சந்திரசேகர ராவ்க்கு ஆதரவு என்று ஒருவாரு எடுத்து கொள்ளலாம்.

அப்படி பார்க்கையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவின்படி தெலுங்கானாவில் சட்ட மன்ற தேர்தலில் முன்னணியில் இருப்பது சந்திரசேகர ராவ் தான். அதே சமயம் நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கானா யாருக்கு சாதகமாக இருக்கிறது என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 44 சதவிகிதம் பேர் மோடிக்கு ஆதரவாக  இருப்பது தெரியவந்திருக்கிறது. ராகுல் காந்திக்கு  39 சதவிகிதத்தினரின் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதுவே மோடி அலை இன்னும் ஓயவில்லை என்பதற்கு ஆதாரமாக இப்போது அமைந்திருக்கிறது.

click me!