அணி மாற காத்திருக்கும் அதிமுக மாஜிகள்! தேடி தேடி பதவி கொடுக்கும் ஓபிஎஸ் ஈபிஎஸ்...

By sathish kFirst Published Sep 18, 2018, 3:14 PM IST
Highlights

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானதை அடுத்து, அதிமுக, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., 
அணிகளாக பிரிந்தது. பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இவ்விரு அணிகளும் இணைந்தன. இந்தநிலையில், டிடிவி தினகரன், பிரிந்து சென்று அமமுகவை தொடங்கி நடத்தி வருகிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானதை அடுத்து, அதிமுக, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., 
அணிகளாக பிரிந்தது. பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இவ்விரு அணிகளும் இணைந்தன. இந்தநிலையில், டிடிவி தினகரன், பிரிந்து சென்று அமமுகவை தொடங்கி நடத்தி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்குப் பிறகு, ஓ.பி.எஸ்.க்கு துணை முதலமைச்சர் பதவியும் அதிமுக  ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு பதவிகள் வழங்கப்படாதது குறித்து அவர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

அரசியல் ஆதாயம் பார்த்து இணைவதால், இவர்களது ஒற்றுமை வெகுகாலம் நீடிக்காது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வந்தனர். அந்த வகையில் தற்போது பதவி சண்டை காரணமாக அதிமுக மூத்த அரசியல் தலைமைகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தலில் தனது ஆதரவாளர்களை மதுசூதனன் மற்றும் ஜெயக்குமார் களமிறக்க, வடசென்னையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில்தான், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பேன் என்று மதுசூதனன் கூறியுள்ளதாக தெரிகிறது.

சிபிஐ சோதனைக்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் டிடிவி தினகரனோடு சென்று விடுவதாக தகவல்கள் வெளியானது. இதன் பிறகே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதனால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள், டிடிவி தினகரன் பக்கம் தாவி விடலாம் என்று முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் தாமோதரன் கட்சி மாறி உள்ளதும், அதன் காரணம்தான் என்றே சொல்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, டி.கே.எம்.சின்னையா, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் தங்களுக்கு பதவி கிடைக்காததால் விரக்தியில் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், அதிருப்தியாளர்களைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன் களத்தில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

click me!