ராம் மோகன் ராவ் எழுப்பியுள்ள கேள்வியை கவனத்தில் கொள்ள வேண்டும் - திருமாவளவன் பேட்டி

 
Published : Dec 27, 2016, 02:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
ராம் மோகன் ராவ் எழுப்பியுள்ள கேள்வியை கவனத்தில் கொள்ள வேண்டும் - திருமாவளவன் பேட்டி

சுருக்கம்

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான தாக்குதல் என்று தலைமை செயலாளர் கூறியுள்ள கருத்து கவனிக்கப்பட வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். 

தலைமை செயலாளர் ராம் மோகன ராவ் அரசியல் வாதிபோல் பேட்டி அளித்திருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பினாலும் அவரது வாதங்களில் உள்ள தன்மைகளை விடுதலை சிறுத்தைகள் கவனித்து வருகிறது. 

தலைமைசெயலாளர் வீடு , அறையில் நடத்தப்பட்ட சோதனை மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று எஸ்.ஆர். பால்சுப்ரமணியம் போன்றோர் தெரிவித்துள்ளனர், 35 ஆண்டு காலம் பணியாற்றிய  மூத்த ஐஏஎஸ் அதிகாரி வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரானது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை தகர்க்கும் நடவடிக்கை எனபதை மறுக்க முடியாது.

சர்ச் வாரண்ட்டில் தனது பெயர் இல்லாத போது நடத்தப்பட்ட சோதனை குறித்து ராம் மோகன் ராவ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தற்போதுவரை தான் தலைமை செயலாளர்தான் தனக்கு பணி நீக்கத்துக்கான அறிவிப்பு வரவில்லை என்று கூறுகிறார் இது குறித்து தமிழக அரசுத்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!
ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!