
முதலமைச்சர் ஜெயல்லிதா மறைவுக்கு பிறகு, கட்சியையும் ஆட்சியையும் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் சின்னம்மா சசிகலா.
நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோர், தனது முழுமையான கட்டுப்பாட்டுக்கள் வந்தாலும், அடிமட்ட தொண்டர்கள் பல இடங்களில் தற்போதைய அதிமுக தலைமைக்கு எதிராகவே இருப்பது தெள்ள தெளிவாகவே தெரிகிறது.
இதுபோன்ற அதிருப்தி தொண்டர்களை சரி கட்டும் முயற்சியில் சின்னம்மா சசிகலா தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாகவும், இதற்காக ஒரு பெரும படையை செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கடுமையான உத்தரவு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாம். அது தங்களது தொகுதியில் உள்ள அதிருப்தி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சரிகட்ட வேண்டும் என்பது தானாம்.
தமிழகம் முழுவதும் சசிகலாவுக்கு எதிராக போஸ்டர்களை கிழிப்பது, சானம் அடிப்பது, மை தெளிப்பது என ஆங்காங்கே சம்பவங்கள் நடநது வந்தாலும், கடலூர் புதுப்பாளையத்த்தில் நடைபெற்ற சம்பவம் அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
காரணம், கடலூர் கிழக்கு மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 200க்கு மேற்பட்ட அதிமுக தொண்டர்கள், பகிரங்கமாக தங்கள் முகம் தெரியும்படியும், பிரமாண்ட பிளக்ஸ் போர்டில் தங்களது முகங்களை பதித்து, தீபாவுக்கு ஆதரவாக தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மாவட்ட அமைச்சரான எம்.சி.சம்பத் இப்பகுதிகளுக்கு பொறுப்பாளர் ஆவார். இதை பார்த்த அவர் கடும் அதிர்ச்சிக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
பின்னர், எதிர்ப்பு போஸ்டர் வைத்த நிர்வாகிகளை அழைத்து சமாதானம் பேசியதாகவும் தெரிகிறது. 100க்கு மேற்பட்டவர்கள், ஒரே இடத்தில் தீபாவுக்கு ஆதரவாக வரிந்து கட்டி இருப்பதால், அவர்களை முதலிலேயே இனம் கண்டு, சரிகட்டாமல் போனது ஏன் என்ற கேள்வியும், டோஸும் தலைமையிடம் இருந்து எம்.சி.சம்பத்துக்கு எப்போதும் உண்டு என கூறுகின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
இதேபோல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வரவேண்டும். அதிமுக பொது செயலாளராக பதவி வகித்து, கட்சியை வழி நடத்த வேண்டும் என அதிமுகவினர் சிலர் கூறி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் படத்துடன், அவரது அண்ணன் மகள் தீபாவின் படத்தை வைத்து, போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்படுகிறது. இதற்கு சசிகலாவை வழி மொழிவோர் எதிர்ப்பு தெரிவித்து அகற்றுகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து தீபாவின் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால், அதிமுக தொண்டர்கள் இடையே சலசலப்பு நிலவி வருகிறது.