மாநிலங்களவை தேர்தல்... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

By vinoth kumarFirst Published Jul 9, 2019, 6:29 PM IST
Highlights

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மாநிலங்களவைத் தோ்தல் வருகின்ற 18-ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். இந்த தேர்தலில் திமுக சார்பில் வில்சன், சண்முகம், என்.ஆர்.இளங்கோவன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தத்தின் அடிப்படையில் வைகோவும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். அதேபோல், அதிமுக தரப்பில் சந்திரசேகரன் மற்றும் முகமது ஜான், பாமக சார்பில் அன்புமணி ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 

இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அதிமுக சார்பில், சந்திரசேகரன் மற்றும் முகமது ஜான், பாமக சார்பில் அன்புமணி ஆகியோரும் தி.மு.க. சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மற்றும் திமுக தொழிற்சங்க தலைவர் சண்முகம் வழக்கறிஞர்கள் வில்சன், இளங்கோ ஆகிய 7 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சுயேட்சை வேட்பாளர்கள் 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், ஒரு வேட்பாளருக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிந்திருக்க வேண்டும் என்பது சட்டவிதியாகும். 

வரும் ஜூலை 11-ம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும். தமிழகத்தில் 6 மாநிலங்களை இடங்கள் என்பதால், ஒருவர் வாபஸ் பெறாவிட்டால், வரும் ஜூலை 18-ல் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!