#BREAKING மாநிலங்களவை தேர்தல்... திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்த மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Sep 14, 2021, 1:19 PM IST
Highlights

கடந்த மே 7ம் தேதி தங்களது மாநிலங்களவை எம்.பி., பதவியை இருவரும் ராஜினாமா செய்தனர். இதனால், காலியான இரு இடங்களுக்கும் வரும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. 

தமிழகத்தில் காலியாக உள்ள இரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களாக கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஏற்கெனவே காலியாக இருந்த ஒரு இடத்திற்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் அப்துல்லா போட்டியின்றி வெற்றி பெற்றார். இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த அதிமுகவின் கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் இருவரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றனர். 

இதனையடுத்து, கடந்த மே 7ம் தேதி தங்களது மாநிலங்களவை எம்.பி., பதவியை இருவரும் ராஜினாமா செய்தனர். இதனால், காலியான இரு இடங்களுக்கும் வரும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. அதில், வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 22ம் தேதியும், வேட்பு மனுக்கள் செப்டம்பர் 23ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 27ம் தேதி என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

இந்நிலையில், மாநிலங்களவையில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், மறைந்த முன்னாள் திமுக எம்.பி. என்.வி.என்.சோமுவின் மகளான, டாக்டர் கனிமொழி, KRN ராஜேஸ்குமார் ஆகியோரை மாநிலங்களவை வேட்பாளராக அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

click me!