தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் உஷாராக இருங்க.. பிச்சு உதறப்போகுதாம்.

Published : Sep 14, 2021, 12:52 PM IST
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் உஷாராக இருங்க.. பிச்சு உதறப்போகுதாம்.

சுருக்கம்

மீனவர்களுக்கான எச்சரிக்கை:வங்கக் கடல் பகுதிகள் 14.09.2021: ஒடிசா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு  40  முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தென்மேற்கு பருவ காற்று காரணமாக 14.09.2021; நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள்  மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. மேலும், 15.09.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

16.09.2021 முதல் 18.09.2021 வரை:  கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பந்தலூர்  (நீலகிரி) 12, தேவலா (நீலகிரி) 6, சின்னக்கல்லார்  (கோவை) 4, பிறையார் எஸ்டேட் (நீலகிரி)  3,  சோலையாறு  (கோவை), வால்பாறை   (கோவை) தலா 2, சித்தார் (கன்னியாகுமரி), பொள்ளாச்சி  (கோவை) தலா1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக் கடல் பகுதிகள் 14.09.2021: ஒடிசா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு  40  முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். அரபிக்கடல் பகுதிகள்:14.09.2021 முதல் 16.09.2021 வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
TASMAC Issue: "மதுவிலக்கு இல்லையா? அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க!" – விஜய் அரசுக்கு மக்கள் வைக்கும் 7 கோரிக்கைகள்