
லைகா நிறுவன இந்தியக் கிளையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், ராஜூ மகாலிங்கத்திற்கு ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படும் என அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த முன்னணி மீடியா நிறுவனமான லைகா இங்கிலாந்தைத் தலைமையகமாக வைத்துச் செயல்பட்டு வருகிறது. 23 நாடுகளில் இருக்கும் இந்த நிறுவனமானது உலகின் பல நாடுகளில் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டுவருகிறது. இந்தியாவிலும் லைகா தயாரிப்பு நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்துஇருக்கிறது.
லைகா தயாரிப்பு நிறுவனத்தின் இந்தியக் கிளையின் தலைவராக ராஜு மகாலிங்கம் செயல்பட்டுவந்தார். தீவிர ரஜினி ரசிகரான இவர். ரஜினியின் 2.0 படத்தைத் தயாரிக்க அதிக முயற்சிகள் எடுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது லைகா நிறுவனம்தான் அந்தப் படத்தைத் தயாரித்துவருகிறது.
கடந்த 31ஆம் தேதி ரஜினி தனிக் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் சேரப்போவதாக ராஜு மகாலிங்கத்தின் ட்விட்டர் பக்கத்தில் உறுதியான தகவல் வெளியிட்டுள்ளார்.. இதற்காக லைகா நிறுவன இந்தியக் கிளையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், ராஜூ மகாலிங்கத்திற்கு ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.