பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போங்க…. உற்சாகமாக கொண்டாடுங்க…. 11983 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை­!!  

 
Published : Jan 03, 2018, 07:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போங்க…. உற்சாகமாக கொண்டாடுங்க…. 11983 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை­!!  

சுருக்கம்

Govt transport corporation announces 11983 spl buses for pongal

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11, 12 மற்றும் 13 அஆகிய தேதிகளில் அரசு போக்குவரத்து கழகம்  சார்பில் 11983 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்..

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்குகுவது குறித்து சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன்  அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் , வரும் 9 ஆம் தேதி பொங்கல் முன்பதிவு தொடங்கும் என்றும் 11,12,13 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்..

சென்னை கோயம்பேட்டில் 29 சிறப்பு கவுண்டர்கள் முன்பதிவுக்காக திறக்கப்படவுள்ளதாகவும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சுமார் 6 லட்சம் பொதுமக்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவித்தார்..

கட்டணம் அதிகம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அப்போது தெரிவித்தார்..

மேலும் இந்த ஆண்டு கோயம்பேடு, சைதாபேட்டை, பூவிருந்தவல்லி, அண்ணாநகர், தாம்பரம் மெப்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர்  எம்,ஆர்.விஜய பாஸ்கர் கூறினார்...

 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!