சந்தனம், பொட்டு வச்சு ஓம் என்று எழுதி ரபேல் விமானத்தைப் பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங் ! டயர் அடியில் எலுமிச்சை வைத்து பூஜை !!

Published : Oct 08, 2019, 08:36 PM IST
சந்தனம், பொட்டு வச்சு ஓம் என்று எழுதி ரபேல் விமானத்தைப் பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங் ! டயர் அடியில் எலுமிச்சை வைத்து பூஜை !!

சுருக்கம்

பிரான்ஸில் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு, டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது. மேலும் ரஃபேல் விமானத்தின் மீது தேங்காய் வைத்து, முன்பகுதியில் ஓம் என்று இந்தியில் எழுதி மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.விமானத்தைப் பெற்றுக் கொண்டார்.  

பிரான்ஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.


 
இரட்டை என்ஜின்கள் கொண்ட அதிநவீன போர் விமானமான ரபேல்,வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானமாகும். இந்த விமானம் இந்திய ராணுவத்துக்கு மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் போர் விமானங்களில் முதல் போர் விமானம் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதன்படி பிரான்சில் உள்ள மெரிக்னாக் என்ற பகுதியில் நடைபெறவுள்ள விழாவில் ரபேல் போர் விமானங்கள்  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

விமானத்தைப் பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங், அந்த விமானத்தின் மீது குங்குமத்தால் ஓம் என்று இந்தியில் எழுதினார். இதையடுத்து ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு, மற்றும் டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!