அட்டூழியத்தை தட்டிக்கேட்காத ரஜினிக்கு மக்கள் ஏன் ஓட்டுப்போடணும்?: வேல்முருகனின் வெறித்தனம்

By Vishnu PriyaFirst Published Oct 8, 2019, 6:03 PM IST
Highlights

‘ரஜினியின் அரசியல் என்ட்ரியானது மாற்றத்தை உருவாக்குமா?’ என்று கேட்டதற்கு...
“சினிமா என்ற பலத்தின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை ரஜினி சென்றடைந்துவிட்டார். எனவே அவரைப் போன்ற நடிகர்களுக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்த்து, தமிழ் தேசத்துக்காக பாடுபடக்கூடிய தலைவர்களை மக்கள் மத்தியில் மீடியாக்கள் கொண்டு சேர்க்க வேண்டும். 
 

ஓடாது! என்பது தெளிவாக தெரிந்திருந்தும் கூட ரஜினிகாந்த் வேண்டி விரும்பி நடித்த படம் தான் ‘பாபா’. ஆனால் அதில் அவர் சிகரெட் குடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் இருந்தன. சினிமா நாயகர்கள் மோசமான முன்னுதாரணத்துடன் நடித்தால், ரசிகனும் அதை ஃபாலோ செய்வான். எனவே அதை தவிர்க்க வேண்டும் ஹீரோக்கள்! எனும் கொள்கையை உயர்த்திப் பிடித்த கட்சிதான் பா.ம.க. இந்த விவகாரத்தில் பாபா ரஜினிக்கும், பா.ம.க.வுக்கும் பெரிதாய் மோதல் வெடித்தது. அப்படத்தின் பெட்டியை பா.ம.க.வின் கரங்கள் வலுவாக இருக்கும் மாவட்டங்களில் கடத்தின, தியேட்டர் திரைகள் கிழிக்கப்பட்டன. மொத்தத்தில் ரஜினிக்கு பெரும் பயத்தை காட்டினர். பா.ம.க.வின் காடுவெட்டி குரு முன்னின்று நடத்திய இந்த சதிராட்டத்தில் அக்கட்சியின் முக்கிய தூணாக இருந்த வேல்முருகனோ இப்போது ராமதாஸுக்கு எதிர்ப்பு திசையில் இருக்கிறார்.

பா.ம.க.வை ‘அது ஒரு செத்த பாம்பு. நான் கண்டுக்கிறதேயில்லை.’ என்று விமர்சித்திருக்கிறார்.ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் ராமதாஸோடு இன்னமும் அவர் ஒத்துப் போகிறார். அது ‘ரஜினி எதிர்ப்பு’ எனும் கொள்கை. இப்பவும் ரஜினியை வெளுத்தெடுத்தே பேசுகிறார் வேல்முருகன். அந்த வகையில், ‘ரஜினியின் அரசியல் என்ட்ரியானது மாற்றத்தை உருவாக்குமா?’ என்று கேட்டதற்கு...“சினிமா என்ற பலத்தின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை ரஜினி சென்றடைந்துவிட்டார். எனவே அவரைப் போன்ற நடிகர்களுக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்த்து, தமிழ் தேசத்துக்காக பாடுபடக்கூடிய தலைவர்களை மக்கள் மத்தியில் மீடியாக்கள் கொண்டு சேர்க்க வேண்டும்.

 

தமிழ்நாட்டில் நடக்கும் அட்டூழியங்களுக்காக மக்களோடு ரஜினி நிற்பதேயில்லை. கமலும் அப்படித்தான். இன்னும் மக்கள் நலனுக்காக இறங்கி வராத இவர்களுக்கு ஏன் மக்கள் ஓட்டுப்போட வேண்டும்.” என்று கேட்டிருப்பவர்....“சமீப காலமாக தி.மு.க., மோடி எதிர்ப்பு விஷயங்களில் அதிக தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. மோடியை எப்படி எதிர்ப்பது என்பதே அவர்கள் கட்சியின் நிலைப்பாடு! மோடியை எதிர்க்கும் விஷயத்தில் நான் தி.மு.க.வை சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. நாடாளுமன்றத்தில் எப்படி தி.மு.க. எம்.பி.க்கள் வீரியமாக செயல்படுகிறார்களோ, அதேபோல் மக்கள் மன்றத்திலும் அவர்கள் செயல்பட வேண்டிதானே!” என்கிறார். கொஞ்சம் வேல்முருகனையும் கவனியுங்க ஸ்டாலின். 
-    

click me!