ராஜீவ் கொலையாளி பேரறிவாளனை முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்டியணைப்பதா.? சிவசேனா காட்டமான விமர்சனம்!

By Asianet TamilFirst Published May 26, 2022, 10:14 PM IST
Highlights

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினல் அது நம் கலாச்சாரம் அல்ல என்று சிவ சேனா கட்சி விமர்சனம் செய்துள்ளது.

1991 மே 21 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிக்குண்டால் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேர் 31 ஆண்டுகள் சிறையில் இருந்து வருகிறார்கள். இவர்களில் பேரறிவாளனை மே 18 அன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனையடுத்து அன்றைய தினமே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவித்தார். அப்போது பேரறிவாளனை கட்டியணைடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மு.க. ஸ்டாலின் பேரறிவாளனை கட்டியணைத்ததை கோபத்தை வெளிக்காட்டாமல் காங்கிரஸார் பொருமி வருகிறார்கள். ஆனால், பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

 

பேரறிவாளன் விடுதலை வட இந்தியாவிலும் எதிர்மறையான விவாதங்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கட்சிகள் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சிவசேனா, பேரறிவாளனை முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்டியணைத்ததை விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் முதல்வர் விமர்சனங்களை முன் வைத்துள்ளது. இதுதொடர்பாக அவர் கூறுகையில், “யாராவது ஒருவர் புதிய பரிமாணத்தை உருவாக்கினால் அது தேசத்துக்கு சரியான உதாரணமாக இருக்காது. 

தமிழகத்தின் அரசியலைப் பற்றி அனைவருக்குமே தெரியும். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இந்தத் தேசத்தின் தலைவராக இருந்தார். அவர் தன்னைத்தானே தியாகம் செய்த தலைவர். அவர் தமிழ்நாட்டில்தான் படுகொலை செய்யப்பட்டார்.  அவரை கொன்றவர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டாடினால் அது நம் கலாச்சாரம் அல்ல என்று நான் நினைக்கிறேன். இது தேசத்துக்கு சரியான உதாரணம் கிடையாது” என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

click me!