ராஜீவ் காந்தி கொலை.. எல்லாரையும் விடுதலை செஞ்சுட்டு போங்க..கொந்தளித்த கே.எஸ் அழகிரி

Published : Jul 10, 2022, 06:00 PM IST
ராஜீவ் காந்தி கொலை.. எல்லாரையும் விடுதலை செஞ்சுட்டு போங்க..கொந்தளித்த கே.எஸ் அழகிரி

சுருக்கம்

அக்னி பாத் திட்டம் என்பது பாஜகவின் ஆள் சேர்ப்பு திட்டம் என்றும் 4 ஆண்டுகளில் அக்னிபாத் திட்டத்தில் சேர்பவர்கள் துப்பாக்கியை கூட துடைக்க கற்று கொள்ள மாட்டார்கள்.

இந்திய விடுதலை போராட்டங்களுக்கு வித்திட்ட 1806 ம் ஆண்டு வேலூர் கோட்டையில் நடைபெற்ற வேலூர் சிப்பாய் புரட்சியின் 216 வது ஆண்டு இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி மக்கான் சிக்னல் பகுதியில் உள்ள சிப்பாய் நினைவுத் தூணுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகளுக்கு.. பாஜக கட்சிகாரர் என்றால் கைது செய்வீங்களா? திமுகவை கிழித்த அண்ணாமலை

பின்னர் வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் நடந்த சிப்பாய் புரட்சி வீரவணக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘அதிமுக இன்றைக்கு 3ஆக உடைந்து கிடைக்கிறது என்று சொன்னால் ஓபிஎஸ் காரணமல்ல எடப்பாடி காரணம் அல்ல சசிகலா காரணமல்ல ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் ஒரு பெரிய திட்டம் தீட்டி அந்த இயக்கத்தை 3ஆக உடைத்து தள்ளி இருக்கிறார்கள் என்று பேசினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, ‘அக்னி பாத் திட்டம் என்பது பாஜகவின் ஆள் சேர்ப்பு திட்டம் என்றும் 4 ஆண்டுகளில் அக்னிபாத் திட்டத்தில் சேர்பவர்கள் துப்பாக்கியை கூட துடைக்க கற்று கொள்ள மாட்டார்கள் என்றும் பேசினார். பேரறிவாளன் விடுதலை பற்றி பேசிய போது, உள்ளவர்களையும் விடுதலை செய்யலாம்.

மேலும் செய்திகளுக்கு.. எடப்பாடி பழனிசாமி எடுத்த புது அஸ்திரம்.. ஓபிஎஸ் நிலைமை பாவம்.. புலம்பும் அதிமுக ஆதரவாளர்கள்!

அவர்களை மட்டுமல்ல 20 ஆண்டுகளில் கொலை கொள்ளை கற்பழிப்பு உள்ளிட்ட தண்டனை பெற்று சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்துவிட்டு, அங்குள்ள காவலர்களை போக்குவரத்து துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் சிறைகளை நெல் கோதுமை குடோன்களாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த இடம் வீணாக கூடாது ‘என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு.. சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!