ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட 28 ஆவது நினைவு தினம் !! சோனியா, ராகுல், பிரியங்கா அஞ்சலி !!

Published : May 21, 2019, 09:39 AM IST
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட 28  ஆவது நினைவு தினம் !! சோனியா, ராகுல், பிரியங்கா அஞ்சலி !!

சுருக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு  நாளை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி , பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் அலுவலகங்களில் அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 21-ந் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடக்கிறது. இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.   

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!