ராஜீவ் காந்தி கொலை வழக்கு; 7பேர் விடுதலை தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!

By T BalamurukanFirst Published Jul 29, 2020, 10:57 PM IST
Highlights

7பேர் விடுதலை, பேரறிவாளன் பரோல் தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

7பேர் விடுதலை, பேரறிவாளன் பரோல் தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். பேரறிவாளன் 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனையில் உள்ளார்.அண்மையில் பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் அளிக்க வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.சமீபத்தில் நளினி சிறையில் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. நளினி தயார் தன் மகளை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று மனு செய்திருக்கிறார்.

7பேர் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி பல ஆண்டுகள்  ஆகிவிட்டது. மத்திய அரசு நீதிமன்றத்தை கைகாட்டுகிறது. நீதிமன்றம் ஆளுநரை கைகாட்டுகிறது. இதில் இருக்கும் அரசியல் மர்மம் நீடித்துக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே பேரறிவாளனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் புழல் சிறையில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பேரறிவாளனுக்கும் கொரோனா தாக்கிவிடுமோ? என்ற எண்ணத்தில் அற்புதம்மாள் வழக்கை தொடர்ந்துள்ளார்.அப்போது, தமிழக அரசு தரப்பில் 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் பரோல் தர  முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேரறிவாளன் தரப்பில் 7 பேர் விடுதலை தீர்மானம் மீது ஆளுநர் 2 ஆண்டுகளுக்கு மேல் முடிவு எடுக்காமல் நிலுவையில் இருப்பதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, 7 பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் ? எனவே இது குறித்தும், பேரறிவாளன் பரோல் தொடர்பாகவும் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்

click me!