அப்பலோ அரசியல்! சென்டிமென்ட் மூவ்மென்ட்! பக்காவாக ஸ்கெட்ச் போடும் ரஜினி!

By Selva KathirFirst Published Dec 28, 2020, 12:52 PM IST
Highlights

மருத்துவர்கள் அறிவுறுத்தலையும் மீறி என் உயிர் தமிழக மக்களுக்காக போனாலும் போக்கட்டும் என்று ரஜினி கூறியிருந்த நிலையில் தற்போது மறுபடியும் அப்படி ரஜினி தரப்பு கூறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 

மருத்துவர்கள் அறிவுறுத்தலையும் மீறி என் உயிர் தமிழக மக்களுக்காக போனாலும் போக்கட்டும் என்று ரஜினி கூறியிருந்த நிலையில் தற்போது மறுபடியும் அப்படி ரஜினி தரப்பு கூறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கையோடு அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுப்பது தனது கடமை என்று கூறி ஐதராபாத்திற்கு விமானம் ஏறினார் ரஜினி. படப்பிடிப்பு தளத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் மிக மிக கடுமையாக பின்பற்றப்பட்டன. ரஜினியை யாரும் நெருங்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை சன் பிக்சர்ஸ் செய்து கொடுத்தது. ஆனால் இவற்றை எல்லாம் மீறி ரஜினியின் கேரவேன் ஓட்டுனர், நயன்தாராவின் மேக்கப் மேன் என நான்கு பேருக்கு கொரோனா உறுதியானது.

இதனை அடுத்து ரஜினி உள்ளிட்டோர் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கொரோனா நெகடிவ் என முடிவு வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் உடலுடன் தொடர்பு கொண்டதில் இருந்து 14 நாட்கள் வரை அறிகுறிகள் தென்படாது, பரிசோதனையில் தெரியாது என்கிற ஒரு தகவல் ரஜினி தரப்பை பீதி அடைய வைத்தது. இதனால் மூன்று நாட்களுக்குள் இரண்டுமுறை ரஜினிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் நெகடிவ் என்றே வந்தன. ஆனால் கேரவேன் ஓட்டுனருக்கு கொரோனா என்பதால் ரஜினி சற்று ஆடிப்போய்விட்டார்.

மேலும் கொரோனா வயதானவர்களை அதிலும் குறிப்பாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதவர்களை எளிதாக தாக்க கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி தனக்கு மிகவும் குறைவு என்று ரஜினி ஏற்கனவே கூறியிருந்தார். எனவே தனக்கு கொரோனா வந்திருந்தால் என்கிற யோசனை தான் ரஜினியை மிகவும் பதற்றம் அடைய வைத்ததாக சொல்கிறார்கள். இதனை அடுத்து தனது உடல்நிலையில் சில காம்ப்ளிகேசன் இருப்பது போல் ரஜினிக்கு தோன்றியுள்ளது. இதனால் தான் படக்குழு அன்றே சென்னை திரும்பிய நிலையில் ரஜினி மட்டும் ஐதராபாத்தில் தங்கிவிட்டார்.

மறுநாளே அவர் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் நெகடிவ் என வந்த பிறகே ரஜினி இயல்பு நிலைக்கு திரும்பியதாக சொல்கிறார்கள். கொரோனா தொடர்பான அச்சம், உடன் இருந்தவர்களுக்கு கொரோனா போன்ற தகவல்கள் ரஜினிக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்த அழுத்தில் மாறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் ரஜினி மயக்க நிலைக்கு சென்றதாகவும் பிறகு சிகிச்சைக்கு பிறகு நார்மல் ஆனதாகவும் கூறுகிறார்கள்.

மூன்று நாட்கள் வரை மருத்துவமனையில் இருந்து ரஜினி பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அப்போது அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு உண்மையில் ரஜினிக்கான அட்வைசா அல்லது அவருக்கான பிஆர்ஓ ஸ்டன்டா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ரஜினி முழுவதுமாக ரெஸ்ட் எடுக்க வேண்டும், வெளிநடமாட்டம் கூடாது என்றெல்லாம் அந்த செய்திக்குறிப்பில் அப்பலோ குறிப்பிட்டுள்ளது. இன்னும நான்கு நாட்களில் ரஜினி தனது கட்சி துவங்கும் தேதியை அறிவிக்க உள்ளார். அதன் பிறகு கட்சிக்காக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் ரஜினி முழுவதுமாக ஓய்வெடுக்க வேண்டும், கொரோனா தொற்றுக்கு வாய்ப்புள்ள விஷயங்களில் ஈடுபடக்கூடாது என்று அப்பலோ செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தனது உயிரே போனாலும் தமிழக மக்களுக்காக போகட்டும் என்று கூறித்தான் ரஜினி அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் வெளியே நடமாடுவது ஆபத்து என்று அப்பலோ செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

இதை எல்லாம் மீறி ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்போது மக்களுக்காக அப்பலோ மருத்துவமனையின் அறிவுறுத்தலையும் மீறி ரஜினி அரசியலுக்கு வந்துள்ளதாக ஒரு ஸ்டன்ட அடிக்க அப்பலோ செய்திக்குறிப்பு பயன்படுத்தப்படலாம் என்கிறார்கள். அதனால் தான் ரஜினி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் கூற வேண்டிய விஷயத்தை அப்பலோ அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் உள்ளது.

click me!