ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு பத்தோடு, பதினொன்றாக ஒரே கருத்தை முன்வைக்கும் ரஜினி - கமல்..!

First Published May 23, 2018, 12:27 PM IST
Highlights
rajinikath and kamalahaasan about sterlite problem issue


தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் 144 தடையை மீறி உள்ளே நுழைய முயன்ற போராட்டக்காரர்களை நோக்கி தடியடி நடத்தப்பட்டது. மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலிசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 17 வயது மாணவி உள்பட 9 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தால் தமிழக அரசு மீதும் காவல் துறையினர் மீதும் அரசியல் கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமற்றி வருகின்றனர். 

மேலும் விரைவில் அரசியல் களத்தில் கால் பதிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், இந்த சம்பவம் குறித்து தனது சமூக வளைத்ததில் தெரிவித்துள்ளார்.  "மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு, தமிழக அரசே பொறுப்பு" என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இதே போல் இந்த சம்பவம் குறித்து ஏற்க்கனவே நடிகர் கமல் கூறியபோது, "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் அமைதியாக போராடிய போதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள். அரசின் அலட்சியமே அனைத்துத் தவறுகளுக்கும் காரணம். இதில் குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு அலையினால் இப்பொழுது அரசின் ஆணையினால், அனைவரும் அமைதி காக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.  

இவர்கள் இருவருமே 'தமிழக அரசின் அலட்சியம் தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!