நீங்க என்ன செய்வீங்கன்னு தெரியாது... போராட்டத்தை நிறுத்தனும்... முதல்வரின் வாய்மொழி உத்தரவு

Asianet News Tamil  
Published : May 23, 2018, 12:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
நீங்க என்ன செய்வீங்கன்னு தெரியாது... போராட்டத்தை நிறுத்தனும்... முதல்வரின் வாய்மொழி உத்தரவு

சுருக்கம்

sterlite death protest must be stop chief minister order

ஸ்டெர்லைட் போராட்டதின்  போது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர். இதனை கடுமையாக கண்டித்து பல்வேறு அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நந்தனம்  அண்ணாசாலையில் மாணவர் அமைப்பும், அயோத்திய குப்பத்தில் மீனவ மக்களும், திமுக மீனவ அமைப்பு டி.ஜி.பி அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

வள்ளுவர் கோட்டத்தில் சிபிஎம் கட்சியினரும் புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட முன்னேற்ற கழகமும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

பாரிமுனையில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாநில முழுவதும் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி வாய்மொழி உத்தரவை வழங்கியுள்ளார். .சென்னையில் மட்டும் சுமார் 500 பேர் போராட்டம் நட்த்தியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு முதல்வர் போராட்டதை ஒடுக்க வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

போராட்ட தீவிரத்தை குறைக்க பல்வேறு வகையிலும் அரசு ஒடுக்க முயல்கிறது. மக்கள் மீது காவல்துறையை கட்டவிழ்த்துள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

விஜய் எல்லாம் அதிமுகவை விமர்சிக்கலாமா..? தவெக-வே லாட்டரி பணத்தில்தான் நடத்தப்படுது.. ஜெயகுமார் அதிரடி அட்டாக்..!
உறுதி கொடுத்த ராகுல்..! இறுதியான திமுக கூட்டணி..! அறிவாலயம் வளைத்த கட்சிகளின் டீடெய்ல் லிஸ்ட்..!