கிருஷ்ணன் - அர்ஜுனன் போன்றவர்கள் "மோடி - அமித்ஷா" ரஜினி புகழாரம்!

Published : Aug 11, 2019, 12:57 PM IST
கிருஷ்ணன் - அர்ஜுனன் போன்றவர்கள் "மோடி - அமித்ஷா" ரஜினி புகழாரம்!

சுருக்கம்

"வனித்தல் கற்றல் மற்றும் தலைமை ஏற்றல்" என்ற தலைப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு செய்த பணிகள் குறித்த ஆவணப் புத்தகம் இன்று வெளியிடப்படுகிறது.

"வனித்தல் கற்றல் மற்றும் தலைமை ஏற்றல்" என்ற தலைப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு செய்த பணிகள் குறித்த ஆவணப் புத்தகம் இன்று வெளியிடப்படுகிறது.

இந்த ஆவண புத்தகத்தின் வெளியீட்டு விழா, சென்னையில் இருக்கும் கலைவாணர் அரங்கில், காலை 10 :30  மணியிலிருந்து ஆரம்பமானது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம்,  உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழிசை சௌந்தர்ராஜன்.  முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்று,  இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் 330 பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், 19 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் வெங்கையா நாயுடு.  இதுகுறித்த பல தகவல்கள் மற்றும் அவர் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகள் குறித்து "வனித்தல் கற்றல் மற்றும் தலைமை ஏற்றல்" புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபல நடிகர் ரஜினிகாந்த் வெங்கையா நாயுடுவை பற்றி புகழ்ந்து பேசினார்.  இதுகுறித்து அவர் பேசுகையில் "மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர்,  துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு.  45 ஆண்டுகளுக்கு பின்பும், தன்னை அவர் நினைவில் வைத்துள்ளது பெருமையாக உள்ளது என கூறினார்.

மேலும் வெங்கையா நாயுடுவும் ஒரு ஆன்மீகவாதி என்றும் அவர் அரசியல் தலைவராக வந்தது ஆச்சரியம் என்று கூறியுள்ளார்.  காஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள் கூறிய ரஜினி, காஷ்மீரை இரண்டாக பிரிக்க மத்திய அரசு எடுத்த முடிவு சிறப்பானது என்றும் கூறியுள்ளார்.   அமித்ஷாவும் - பிரதமர் மோடியும் கிருஷ்ணன் - அர்ஜுனன் போன்றவர்கள் என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்".

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை