
ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பிற்கு பின்னர் மொட்டுமொத்த மீடியாவும் ரஜினியை வட்டமிட்டே செல்கின்றன. ரஜினி என்ன சொல்லுவார். ரஜினியின் அடுத்த மூவ் என்ன? என மக்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் செய்தியை கொடுக்க பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில் மலேசியாவில் நடந்த நட்சத்திர நிகழ்ச்சியில் கூறிய ஒரு வார்த்தை அரங்கத்தையே அதிர வைத்தது.
தமிழ் திரை நட்சத்திரங்கள் இணைந்து நடத்தும் நட்சத்திர விழாவில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ளார். நடிகர் மற்றும் நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினி நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு மலேசியா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மலேசிய சென்றுள்ள அவர் நடிகர்கள் விளையாட உள்ள நட்சத்திர கிரிக்கெட்டையும் கண்டுகளிக்க உள்ளார்.
இந்நிலையில் மேடை ஏறிய நடிகர் ரஜினியிடம் கிரிக்கெட் தொடர்பான பல கேள்விகளை கேட்டனர். அதற்கு ரஜினி பல சுவாரஸ்யமான தகவல்களை பதிலாக அளித்தார். அப்போது நடிகை சுஹாசினி ரஜினியிடம், உங்கள் இளமைக்காலத்தில் இருந்து இப்போதுவரை யாராவது உங்களை கிளீன் போல்ட் ஆக்கியிருக்கிறார்களா? என கேட்டார். அப்போது, ரஜினி தனகே உரிய ஸ்டைலில், என்னை இதுவரை யாரும் கிளீன் போல்ட் ஆக்கியதில்லை என கூறியபோது அரங்கமே ஆர்பரிப்பால் அதிர்ந்தது.