
ரஜினிகாந்த் சிறைக்கு செல்லாமல் இருந்தால் நல்லது...! பகீரங்க ட்வீட்...!
நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வந்து சிறைக்கு செல்லாமல் இருந்தால் சரி என இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், சில கட்சியினர்அதிருப்தியையும் தெரிவித்து உள்ளனர்.
ரஜினி காந்தின் அரசியல் நடவடிக்கை தற்போது சூடு பிடிக்கும் வண்ணம், அதற்கான தனி இணையதளத்தையும் தொடங்கிவிட்டார்.
இந்நிலையில்,ரஜினியின் அரசியல் வருகைக்கு,இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன், என் அப்பாவிற்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த் ,இவர் சிவாஜி படத்தில் வருவது போல மக்களுக்கு நல்ல செய்ய அரசியலுக்கு வந்து, பின்னர் சிறைக்கு செல்லலும் காட்சி இடம்பெறும்....இது போன்ற நிகழ்வு அவருடைய நிஜ வாழ்கையில் நடக்காமல் இருந்தால் நல்லது என தெரிவித்துள்ளார்.