கதி கலங்க வைத்த காவி பேச்சு... டெல்லியில் இருந்து வந்த போன்... பதறியடித்து ஓடி வந்த ரஜினிகாந்த்..!

By Thiraviaraj RMFirst Published Nov 8, 2019, 1:32 PM IST
Highlights

திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என ரஜினிகாந்த் பேட்டியளித்தது பாஜக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. 

காலை அளித்த முதல் பேட்டியில், ‘’எனக்கும் திருவள்ளுவருக்கும் காவி சாயம்பூச முயற்சி நடக்கிறது அது நடக்காது. தம்மை பாஜக உறுப்பினராக நிறுவ முயற்சி நடக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது அது நடக்காது.  திருவள்ளுவருக்கு காவி அணி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பம். திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன். 

பாஜக எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை.  நான் பாஜகவை சேர்ந்தவன் என்றும், பாஜக தலைவராக வருவேன் என்றும் நிறுவ முயற்சிக்கிறார்கள்.  சிறப்பு விருது அறிவித்தவர்களுக்கு நன்றி. வள்ளுவர் நாத்திகர் அல்ல ஆத்திகர். கடவுள் நம்பிக்கை கொண்டவர். பேச வேண்டிய விஷயங்களை விட்டு விட்டு திருவள்ளுவர் பற்றி இவ்வளவு பெரிய சர்ச்சை கிளப்பியது அர்ப்பத்தனமானது. திருவள்ளுவர் போன்ற ஞானிகள் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். ’’என அவர் பேசி இருந்தார். 

பேட்டியளித்து விட்டு வீட்டுக்குள் சென்ற ரஜினிகாந்த்துக்கு டெல்லி பாஜக தலைமையிடம் இருந்து போன் வந்துள்ளது. ‘’அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவெடுப்பது உங்கள் விருப்பம். அதற்காக பாஜகவை விமர்சிக்கும் வகையில் பேச வேண்டுமா?  உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளியுங்கள் எனச் சொல்லப்பட்டு இருக்கிறது. 

வேறு வழியில்லாமல், பேட்டி கொடுத்த அரைமணி நேரத்திற்குள் செய்தியாளர்களி மீண்டும் சந்தித்த ரஜினி, ‘’காவி விவகாரத்தை ஊடகங்கள் தான் பெரிதாக்கி விட்டன. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரத்தை ஊடங்கள் தான் பெரிதாக்கி விட்டன. நான் எப்போதும் வெளிப்படையாகத்தான் பேசுவேன். பேசி வருகிறேன்.

அயோத்தி தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் ஏற்றுக் கொண்டு அமைதி காக்க வேண்டும்.  அரசியல் கட்சி தொடங்கும் வரை திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.  எம்.ஜி.ஆர் கூட அரசியலுக்கு வந்த பிறகும் முதல்வராகும் வரை திரைப்படங்களில் நடித்தார். தமிழகத்தில் சரியான ஆளுமைக்கான வெற்றிடம் இன்னும் உள்ளது.  குறிப்பிட்ட சிலர் மட்டுமே எனக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். அரசியலில் இது சகஜம்.  திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பம்’’என முதல் பேட்டியில் பேசியதை அப்படியே உல்டாவாக மாற்றி சமாளித்தார் ரஜினி. 

click me!