வெற்றிடத்தை ஸ்டாலின் காற்றாகி நிரப்பி விட்டார்... ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி..!

Published : Nov 08, 2019, 01:14 PM IST
வெற்றிடத்தை ஸ்டாலின் காற்றாகி நிரப்பி விட்டார்... ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி..!

சுருக்கம்

தமிழகத்தில் இருந்த வெற்றிடத்தை ஸ்டாலின் எப்போதோ நிரப்பி விட்டார். தமிழகத்தில் இருந்த வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகி விட்டது.

தமிழகத்தில் இருந்த சரியான ஆளுமைக்கான வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் என்ற காற்று நிரப்பி விட்டது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் சரியான ஆளுமைக்கான வெற்றிடம் இன்னும் உள்ளது. அதை நிரப்ப வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன், ‘’தமிழகத்தின் அரசியல் தட்பவெப்பநிலை குறித்து ரஜினிகாந்துக்கு தெரியவில்லை. தமிழகத்தில் இருந்த வெற்றிடத்தை ஸ்டாலின் எப்போதோ நிரப்பி விட்டார். தமிழகத்தில் இருந்த வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகி விட்டது.

வெற்றிடத்தை காற்று தான் நிரப்பும். அந்த வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் என்ற காற்று நிரப்பி விட்டது. ரஜினிக்கு யார் காவி சாயம் பூச முயன்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அதுபற்றி அவருக்கு தன் தெரியும்’’எனத் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!